தமிழ் சினிமாவில் காமெடின்களாக இருந்த சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிடோர் சினிமாவில் கதநாகனாக மாறிவிட்டார்கள் இதனால் காமெடியன்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமேற்பட்டுவிட்டது. இவர்கள் அடுத்து வந்த காமெடி நாடிகர்கள் சூரி, யோகி பாபு ஆகியோர்கள் காமெடியன்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் வரிசையில் நடிகர் சதீசும் காமெடியில் கலக்கி வருகிறார்
காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய “பொய் சொல்ல போறோம்” என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.அதன் பின்னர் “மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே” போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
தற்போது மிர்ச்சி சிவா நடித்து வரும் “தமிழ் படம் -2 ” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் நடிப்பதை குறித்து பேட்டியளித்த சதிஸ்”இந்த படத்தில் அவர் காமெடி வில்லனாக நடித்துள்ளாராம். இந்த படத்தில் அவர் பேசும் சீரியசான வசனங்களை கேட்டு கண்டிப்பாக மக்கள் சிரிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் நீங்கள் எப்போது ஹீரோவாக நடிக்க போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு” ஹீரோவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை, அந்த கஷ்டத்தை மக்களுக்கு கொடுக்கும் எண்ணமும் இல்லை, காமெடியனாக இருந்த சந்தானம் ஹீரோவாக நடிக்க பல தகுதிகளை வளர்த்து கொண்டு அதன் பின்னரே ஹீரோவாக நடித்து வருகிறார்.அந்த தைரியம் தனக்கு இல்லை” என்று காமெடியாக கூறியுள்ளார் “