தப்பாக சென்ராயனை வெளியேற்றியதால் கோபத்தில் காமெடி நடிகர் சதீஷ்.! என்ன சொன்னார் தெரியுமா.?

0
412
Sathish
- Advertisement -

காமெடி நடிகரான சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக இருந்து வருகிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் சதீஷ், சமீபத்தில் சென்ராயன் வெளியேறியது குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

கடந்த வாரம் நாமினேஷனில் இருந்த போட்டியாளர்களில் ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என்று மக்கள் அனைவரும் ஆனித்தனமாக நம்பினர். ஆனால், சனிக்கிழமை (செப்டம்பர் 7) நடந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா இந்த வாரமும் காப்பற்றுபட்டுவிட்டார் என்று கமல் அறிவித்ததும் ரசிகர்கள் மிகவும் அதிச்சியடைந்தனர்.

இதனால் கமல் மீதும் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சதீஷ் “ஏமாந்தவங்க வெளியே ஏமாத்தினவங்க உள்ளே. இது ஜெயிலுக்கு ஓகே ஆனால் ??” என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு “லேடீஸ் ஹாஸ்டல்” என்றும் பதிவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி பெண்களுக்கு மட்டும் தான் என்பது போல கடுமையாக விமர்சித்துள்ளார்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் கமல் பேசுகையில் கூட நியாயமாக ஐஸ்வர்யா தான் வெளியேறி இருக்க வேண்டும் என்றும் அடுத்த வாரம் ஐஸ்வர்யா கண்டிப்பாக நாமினேஷனில் இடம்பெற வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தார். தற்போது நடிகர் சதீசும், சென்ராயனை ஏமாத்திய ஐஸ்வர்யா தான் உண்மையில் வெளியேற்றபட்டிருக்க வேண்டும் என்று தனது கருத்தினை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement