பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் வெளியேறும் போது ஜாக்லின் அழுதது தொடர்பான சர்ச்சைக்கு சத்யா கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். பின் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த பணப்பெட்டி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் வெற்றி பெற்று விட்டார்கள்.
பிக் பாஸ் 8:
ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார். இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் grand finale சுற்று நேற்று நடந்து இருந்தது. முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

ஜாக்லின் எவிக்ஷன் குறித்த சர்ச்சை:
இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதை விட ஜாக்குலின் எவிக்ட் ஆனது தான் சோசியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆகி இருந்தது. பணப்பெட்டி டாஸ்கில் தோற்று ஜாக்குலின் வெளியேறும்போது மற்ற போட்டியாளர்களும் அவரை நினைத்து அழுது கஷ்டப்பட்டார்கள். ஆனால், சில போட்டியாளர்கள் அவர் வெளியேறும்போது சிரித்துக்கொண்டு பேசியிருந்தார்கள். குறிப்பாக, சத்யா- ஜெஃப்ரி இருவரும் கிண்டல் செய்து சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். இதுதான் சர்ச்சையாகி இருந்தது. இதற்கு ரசிகர்கள் பலரும் சத்யா, ஜெஃப்ரை கண்டித்து திட்டி இருந்தார்கள்.

சத்யா பேட்டி:
அதுமட்டுமில்லாமல் இந்த சம்பவம் குறித்து கூட கிராண்ட் பினாலேவின் போது விஜய் சேதுபதி கேட்க, ஜாக்குலின் இடம் சத்யாவும் சாரி சொல்லி இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சத்யா, ஜாக்லின் வெளியில் போனதற்கு நானும் ஜெப்ரியும் சந்தோசப்படவில்லை. இதை நான் ஜாக்லின் இடமும் தெளிவாக சொல்லிவிட்டேன். அவர்களும் ஸ்போட்டிவாக எடுத்துக் கொண்டார்கள். நாங்கள் சிரித்ததை தப்பாக எடுத்துக்கிட்டவர்களுக்காக வேண்டுமென்றால் திரும்பவும் ஒரு தடவை கூட நான் சொல்கிறேன். பிக் பாஸ் ஒரு ஷோ. உள்ள போற எல்லோருக்குமே டைட்டில் வாங்கணும் என்று எண்ணம் இருக்கிறது. டைட்டில் ஒரே ஒருத்தருக்கு தான் கிடைக்கும்.

விளக்கம் கொடுத்த சத்யா:
அதனால் குரூப் சேர்ந்து விளையாடுவதெல்லாம் அங்கு ஒர்க் அவுட் ஆகாது. இது நிகழ்ச்சி பார்க்கிற எல்லோருக்குமே நன்றாக புரியும். இப்படி இருக்கும்போது ஒருத்தர் வெளியேறும்போது இன்னொருத்தர் வருத்தப்படுகிறார்கள். அதுவும் உருண்டு புரண்டு அழுது ரொம்ப ஓவரா ஃபீல் பண்றாங்கன்னா யாராச்சும் நம்புவார்களா? சின்னப்புள்ளத்தனமா இருக்கு. அந்த மாதிரியான சில பேருடைய செயல்கள் எங்களுக்கு ரொம்ப செயற்கை தனமாக நடிப்பாக தெரிந்தது. அதனால்தான் அதை கலாய்த்தோம். யார் அப்படி நடந்தார்கள் என்றெல்லாம் நீங்கள் என்னிடம் கேட்டீங்கன்னா, அதை சொல்லி அதற்குப் பிறகு விளக்கம் கொடுத்துட்டு இருக்கணும். அந்த விவரம் எல்லாம் மக்களுக்கே தெரியும் என்று கூறியிருக்கிறார்.






