மோகினி ஆட்ட கலைஞர் ஆர் எல் வி ராமகிருஷ்ணனை நடன கலைஞர் சத்யபாமா தரக்குறைவாக விமர்சித்து இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் பலதரப்பட்ட நடன கலைகள் இருக்கிறது. அதில் ஒன்று தான் மோகினி ஆட்டம். இந்த மோகினி ஆட்ட கலையில் பிரபலமான நபராக இருப்பவர் ஆர் எல் வி ராமகிருஷ்ணன். இவர் மோகினி ஆட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் தான் ஆர் எல் வி ராமகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பரதநாட்டியம், மோகினி ஆட்ட கலைஞர் கலமண்டலம் சத்யபாமா என்பவர் ராமகிருஷ்ணனை தரக்குறைவாக விமர்சித்து பேசி இருக்கிறார். இது தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, திருவனந்தபுரத்தில் நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார் சத்யபாமா. இவர் பிரபலமான மூத்த கலைஞரும் ஆவார்.
சத்யபாமா பேட்டி:
இவர் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், மோகினி ஆட்டம் ஆடும் கலைஞர்கள் தங்களுடைய கால்களை கொஞ்சம் அகலமாக விரித்து வைத்து ஆட வேண்டி இருக்கு. ஒரு ஆண் இப்படி கால்களை விரித்து வைத்துக் கொண்டு மோகினி ஆட்டம் ஆடுவதை பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கும். அதேபோல் ஆண்கள் மோகினி ஆட்டம் ஆட வேண்டும் என்றால் அவர்கள் அழகாக இருக்க வேண்டும். இது என்னுடைய கருத்து.
சர்ச்சையான சத்யபாமா கருத்து:
ஒருவர் காக்கா நிறத்தில் இருக்கிறார். அழகு நிறைந்தவர்கள் ஆடும் மோகினி ஆட்டத்தை ஆடுவதற்கு அவர் தகுதியற்றவர். அது பார்ப்பதற்கே அருவருப்பான மோகினி ஆட்டமாக இருக்கிறது என்று விமர்சித்து கடுமையாக பேசியிருக்கிறார். இது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. மேலும், இவர் இப்படி குறிப்பிட்ட நபர் யார் என்றால் ஆர் எல் வி ராமகிருஷ்ணன் தான். இதை கேரளாவை சேர்ந்த பலர் சோசியல் மீடியாவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அரசியல் பிரபலங்கள் கண்டனம்:
அதுமட்டுமில்லாமல் சத்யபாமாவுடைய கருத்து மிகப்பெரிய கேரளாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இவருடைய கருத்துக்கு கேரளா அமைச்சர்கள் சஜி செரியன், ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உட்பட பலருமை கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இதனை அடுத்து சத்யபாமா மீது SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் கேரள போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். தற்போது இந்த சம்பவம் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கலாபவன் மணி குறித்த தகவல்:
இந்திய திரை உலகில் பிரபலமான நடிகர், பாடகர் கலாபவன் மணி. இவர் மலையாள திரைப்படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லனாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கலாபவன் மணி அவர்கள் நாட்டு புறப்பாடல்களை கூட பாடி இருக்கிறார். பின் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி கலாபவன் மணி இறந்து விட்டார்.