பெரியாரிஸ்ட் குறித்து நடிகர் சத்யராஜ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். “கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்டவர் சத்யராஜ். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி இருந்தார்.
அதனை அடுத்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் சினிமாவின் நடித்து நடிகராக திகழ்ந்தார். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சத்யராஜ் திரைப்பயணம்:
மேலும், பிரபாஸின் பாகுபலி படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். அதன் பின் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம். இந்த படத்தில் சத்யராஜின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சத்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படங்கள் பிரின்ஸ், லவ் டுடே.
சத்யராஜ் அளித்த பேட்டி:
தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சத்யராஜ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, பெரியாரிஸ்டாக இருந்தாலே வாழ்க்கை ரொம்ப ஈசியாக இருக்கும். நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், இந்த சாங்கியம் , சடங்கு என்று எதையும் பார்க்காமல் வாழ்பவனே நல்ல சிறந்த வாழ்க்கை வாழ்வான். இல்லை என்றால் ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து யோசித்து அவன் வாழ்க்கை பின்னாடி தான் செல்லும்.
பெரியார் குறித்து சொன்னது:
அவன் மற்றவர்களுக்காக யோசித்து தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து விடுவான். எதையும் இல்லாமல் பெரியாராக வாழ்ந்தால் நாம் மட்டுமில்லாமல் நம்முடைய சுற்றி வாழ்பவர்களும், எதிர்காலமும் நன்றாக இருக்கும். மூடநம்பிக்கை இல்லாமல் வாழ்ந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார். இப்படி சத்யராஜ் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரியார் படம்:
இயக்குனர் ஞான ராஜசேகர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் பெரியார். பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் பெரியார் ஆக சத்யராஜ் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் சந்திரசேகர், ஜோதிமணி, குஷ்பூ, நிழல்கள் ரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலையும் பெற்று தந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.