என்ன நீ லூசுன்னு கூடு திட்டு, ஆனா – ஷாருக்கான் படத்தில் சத்யராஜ் போட்ட கண்டிஷன். தமிழன்னு நிரூபிச்சிட்டாரு.

0
584
shah
- Advertisement -

ஷாருக்கான் இடம் கண்டிஷன் போட்டு தான் படத்தில் நடித்தேன் என்று சத்யராஜ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. “கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்டவர் சத்யராஜ். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதனை அடுத்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தார். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரபாஸின் பாகுபலி படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

சத்யராஜ் நடித்த படங்கள்:

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்து இருந்த வீட்ல விசேஷம் என்ற படத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.
இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருந்தார். மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து இருந்தார்கள். அதிலும் இந்த படத்தில் சத்யராஜின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சத்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிரின்ஸ்.

பிரின்ஸ் படம்:

சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சூரி,பிரேம்ஜி உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து தற்போது சத்யராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

லவ் டுடே படம்:

அதோடு இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றது.

சத்யராஜ் அளித்த பேட்டி:

இந்த நிலையில் லவ் டுடே படம் தொடர்பாக சத்யராஜ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அதில் அவர் ஷாருக்கான் குறித்து கூறியிருந்தது, சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நான் நடித்திருந்தேன். அதில் தமிழ் மொழி பேசும் பெண்ணாக தீபிகா நடித்திருந்தார். அவருடைய தந்தையாக நான் நடித்திருந்தேன். அப்போது ஒரு காட்சியில் ஷாருக்கான் என்னை திட்டுவது போன்று வரும். அவர் மொத்தமாக திட்டுவது மாதிரி சொன்னார்கள். உடனே நான், என்னை என்ன வேணாலும் பேசுங்கள். மொத்தமாக ஊரை திட்ட வேண்டாம். ஊரை திட்டினால் தமிழினத்தை குறிக்கும் மாதிரி இருக்கும் என்று சொன்னேன்.

Advertisement