‘எம்.ஜி.ஆர்.பாட்டு வரி போல,என் மகள் அவர்களுக்காக உழைப்பார் – சத்யராஜ் நெகிழ்ச்சி.

0
467
- Advertisement -

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். “கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்டவர் சத்யராஜ். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதனை அடுத்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தார். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரபாஸின் பாகுபலி படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

குடும்பம் :

சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற ஒரு மகனும் மற்றும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் திவ்யா அப்படி இல்லை. சின்ன வயதில் படங்களில் நடிக்க ஆசை பட்டாலும் பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார் தனது அப்பாவினை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவர் சத்தியராஜ் மகள் திவ்யா. நியூட்ரிஷன் துறையில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்பெரன்ஸ் நடத்தியுள்ளார். அடிக்கடி ஊட்டச்சத்து குறித்த பல பயனுள்ள பதிவுகளை திவ்யா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

சத்யராஜ் அறிக்கை :

இந்த நிலையில் தான் இவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் ” இலங்கை நாட்டில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் நெடுந்தீவு பசுமைப்பள்ளி, அமைத்திருக்கும் பசுமை சமுதாயம் என்ற பெயரில் என்னுடைய மகள் திவ்யாவும், ஈழத்து காந்தி என அழைக்கப்படும் செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரஹாசனும் இணைந்து ஒரு அற்புதமான திட்டத்தை அங்கே தொடங்கியுள்ளனர்,

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு கல்வி :

அந்த திட்டத்தை நினைத்து நான் மிகவும் பெருமை படுகிறேன். மகிச்சியும் அடைகிறேன். இந்த திட்டத்தில் மக்களுக்கு தேவையான பல பயனுள்ள விஷியங்கள் அடங்கி இருக்கிறது. குழந்தைகளுக்கு கல்வி, எதிர்காலம் மற்றும் விவசாயம் போன்ற மிக அற்புதமான வற்றை கற்றுக்கொள்வதும் அதில் அந்த குழந்தைகளின் பெற்றோர்களை ஈடுபட செய்வதன் மூலம் அவர்களுக்கு ஓரு தொழிலை கற்றுக்கொள்வதர்க்கான வாய்ப்பு கிடைக்கிறது.

எம் ஜி ஆர் போல :

இதில் என்னுடைய மகளும் பூங்கோதை சந்திரஹாசனும் இணைந்து செயல்படுவதை நினைக்கும் போது எனக்கு மகிச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் நான் வாத்தியாரின் (எம் ஜி ஆர்) நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற பாடலை வருவது போல என்னுடைய மகள் திவ்யாவும் ஈழ தமிழருக்காக உழைப்பார் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார் நடிகர் சத்யராஜ். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement