தமிழகம் முழுவதும் புதிய புரட்சியை ஏற்ப்படுத்தும் வகையிலான ஒரு திட்டத்தை நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யாராஜ் முன்னெடுத்து செல்ல உள்ளார். இதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ஒப்புதல் பெற்ற நிலையில், தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் திவ்யா சத்யராஜின் திட்டத்திற்கு கிரீன் சிக்னல் காண்பித்துள்ளார்.
இந்தியா முழுவதிலும் பல இலட்சம் குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இன்றி, பல்வேறு விதமான உடல்நல குறைவுக்கு ஆளாகினர். அது போன்ற ஒரு கொடுமையான சூழலில் இருந்து பள்ளி குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ‘அட்சயப் பாத்திரம்’ என்ற அறக்கட்டளையின் மூலமாக தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கிவிட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் ராகியினால் செய்யப்பட்ட உணவும், ராகி கலந்த பாலும் காலை உணவாக வழங்கப்படும்.
குழந்தைகளின் உடல்நலத்திற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் ‘அட்சயப் பாத்திரம்’ அறக்கட்டளை மூலமாக இந்த திட்டத்தினை இன்றி வெற்றிகரமாக செயல்படுத்த போவதாக திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்