இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவினால் 5,734 பேர் பாதிக்கப்பட்டும், 198 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நநிலையில் சத்யராஜின் மகள் திவ்யா முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் கட்டப்பா என்ற வார்த்தையின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். சத்தியராஜின் படங்கள் எல்லாம் வேற லெவல். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா அவர்கள் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஆக இருக்கிறார். சத்யராஜின் மகள் திவ்யா அவர்கள் கொரோனா வைரஸ் சம்பந்தமாக முதலமைச்சார் எடப்பாடி பழனி சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Advertisement

அந்த கடிதத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நான் விட்டமின் குறைபாடு சம்பந்தமாக சில ஆய்வில் ஈடுபட்டு இருந்தேன். அப்போது 38 சதவீத ஆண் பிள்ளைகளும் 40% பெண் பிள்ளைகளும் இரும்புச்சத்து குறைபாட்டுடன் இருந்தார்கள். இதுகுறித்து நான் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடமும் தமிழக அரசிடமும் தெரிவித்திருந்தேன். எனவே ,அவர்கள் பள்ளியில் அளிக்கப்படும் மதிய உணவு குறித்து ஏதாவது செய்யலாம் என்று கூறியிருந்தேன்.

தற்போது வைரஸ் காரணத்தால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் தற்போது மதிய உணவு மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகரிப்பும் திட்டம் தற்போது செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே, ஏழை குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கிடைக்கும் ஊட்டச்ச்த்துக்களை விலையில்லா திட்டத்தில் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இரும்புச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் மோசமாக பாதிக்கக்கூடும்.

Advertisement

Advertisement

எனவே அவர்களுக்கு இரும்புச்சத்து ஊட்டச்சத்துக்களை அளிக்க நீங்கள் ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறேன் இதன் மூலம் வசதியில்லா குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள் நன்றி என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, கொரோனா வைரஸில் இருந்து காத்துக்கொள்ள எந்த வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் திவ்யா டிப்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement