2002ல் வெளியான சத்யராஜின் ‘மாறன்’ பற்றி தெரியுமா ? இதுக்கு தான் ‘உண்மையை அப்புறம் சொல்றேன்’ னு சொன்னாரா இயக்குனர் ?

0
556
maaran
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கடைசியாக இவர் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள படம் ‘மாறன்’. இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இந்த படம் நேற்று வெளியாகி இருக்கு. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ராம்கி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

மாறன் படம் பற்றிய தகவல்:

ஜகமே தந்திரம் படத்தின் படு தோல்வியை தொடர்ந்து வெளியாகியிருக்கும் மாறன் திரைப்படம் தனுஷிற்கு கைகொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் குறித்து நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து கொண்டு வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த படம் சத்யராஜ் நடித்த படத்தின் காப்பி என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

சத்யராஜ் நடித்த மாறன் :

ஜவகர் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாறன்’. இந்த படத்தில் சத்யராஜ், சீதா மற்றும் மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் நடித்து இருந்தனர். அப்பா-மகன் சென்டிமென்ட் நிறைந்த திரைப்படம். மாநிலத்தில முதலாவதாக வரும் சுதந்திரத்திற்கு மருத்துவக் கல்லூரியில் கற்க வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு சிவதாஸ் மற்றும் அவன் நண்பர்களினால் பகிடிவதைக்கு ஆளாகிறான்.

-விளம்பரம்-

மாறன் – மாறன் :

இறுதியில் சிவதாசை எதிர்த்து கல்லூரி தேர்தலில் வெற்றிபெறுகிறான். இதனால் கோபம் கொண்ட சிவதாஸ், சுதந்திரத்தை கொன்று பிணத்தை மறைக்கிறான். தந்தையின் செல்வாக்கினால் குற்றத்தில் இருந்து தப்பிக்கிறான். சுதந்திரத்தின் தந்தை மாறன், இவர்களை எப்படி பழி தீர்க்கின்றான் என்பதே மீதிக்கதை. தற்போது இதே கதையை தான் தனுஷ் நடித்த மாறன் படத்தில் தூசி தட்டி எடுத்து இருக்கின்றனர் என்று விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.

இயக்குனரின் பதிவு :

ஏற்கனவே, இந்த படம் ஜீவா நடித்த ‘கோ’ ரஜினிகாந்த் நடித்த ‘ தர்பார்’ போன்ற படங்களின் சாயல் என்று கூறப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மாறன் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் சமீபத்தில் தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் ‘உண்மையை அப்புறம் சொல்றேன்’ என்று பதிவிட்டு பின்னர் அந்த பதிவை நீக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாறன் படத்தின் படப்பிடிப்பின் போது கார்த்திக் நரேன் திடீரென விலகி விட்டதாகவும், தனுஷ் தான் மீதி படத்தை இயக்கினார் என்ற ஒரு வதந்தியும் கிளம்பி இருந்தது. இந்த நிலையில் தற்போது உண்மையை அப்புறம் சொல்றேன் என இயக்குனர் கார்த்திக் நரேன் பதிவிட்டு டெலிட் செய்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement