‘டிஜிட்டல் இந்தியா இல்லை, திருமா இந்தியா’-திருமாவளவனை புகழ்ந்து தள்ளிய சத்யராஜ்

0
1891
Sathyaraj
- Advertisement -

டிஜிட்டல் இந்தியா இல்லை, திருமா இந்தியா என்று திருமாவளவனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். “கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தன்பக்கம் கட்டி போட்டவர் சத்யராஜ். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

-விளம்பரம்-

தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பை தாண்டி எப்போதும் ஒரு பெரியாரிஸ்டாகவும், திராவிட இயக்க ஆதரவாகவும் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நடிகர் சத்யராஜ் அவர்கள் சமீப காலமாகவே விசிக தலைவர் திருமாவளவனை அடிக்கடி சந்தித்து நட்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பேசி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இது குறித்து பலருமே பலவித கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள்.

- Advertisement -

திருமாவளவனின் பிறந்தநாள்:

இந்த நிலையில் திருமாவளவனின் பிறந்தநாளுக்கு சத்யராஜ் கூறியிருக்கும் கருத்துதான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, தற்போது 61வது பிறந்த நாளில் திருமாவளவன் அவர்கள் அடி எடுத்து வைக்கிறார். இதனை வாழ்த்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருக்கிறது. அதில் சத்யராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். அப்போது மேடையில் சத்யராஜ், திருமாவளவனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சத்யராஜ் அளித்த பேட்டி:

உலகத்தில் அதிக ஆயுளுடன் வாழ்பவர்கள் ஜப்பானில் இக்கினோவா என்ற இடத்தில் இருக்கிறதாக சொல்கிறார்கள். குறைந்தபட்ச வயது அங்கு 100 தானம். அதற்கு காரணம் எது பிடிக்குமோ அதை அறிந்து அவர்கள் செய்கிறார்கள். அதேபோல் சமூகத்திற்கு தொண்டு செய்யும் தொண்டனாக இருந்தாலே ஒருவரால் நூறு வயது வாழ முடியும் என்று புத்தகத்தில் இருந்தது. அப்படி மக்களுக்கு உழைப்பதை சந்தோஷமாக செய்பவர் தான் திருமாவளவன். இவர் இக்கினோவா கிராம மக்களைப் போல 100 வயது தாண்டி வாழ வேண்டும்.விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் தான் எனக்கு சின்ன விஷயமாக இருந்தால் கூட சொல்லி கொடுப்பார்கள்.

-விளம்பரம்-

டிஜிட்டல் இந்தியா குறித்து சொன்னது:

அம்பேத்கர் சொன்னது போல கற்பித்து ஒன்று சேர வைத்து புரட்சி செய்ய வைப்பவர் திருமாவளவன். டிஜிட்டல் இந்தியா என்று சொல்கிறார்கள். டிஜிட்டல் இந்தியாவை விட திருந்திய இந்தியா தான் வர வேண்டும். அனைவருக்கும் சமத்துவம் உள்ள இந்தியா தான் வர வேண்டும். அம்பேத்கர் கொள்கை, பெரியாரின் கொள்கை, மார்க்சிய கொள்கை, பிரபாகரன் வீரத்தை போற்றும் இந்தியா வரவேண்டும். அதற்கு குறியீடாகத்தான் டிஜிட்டல் இந்தியா இல்ல திருமா இந்தியாவாக மாற வேண்டும்.

சாதி குறித்து சொன்னது:

இது திருமாவுக்கு காக்கா பிடிக்க பேசவில்லை. இதுவரை நான் அவரிடம் எதுவும் கேட்டதில்லை. கேட்கப்போவதுமில்லை. மக்களுக்காக உழையுங்கள் என்று கூட நான் அவரிடம் கேட்க மாட்டேன். ஏனென்றால் அவர் ஏற்கனவே மக்களுக்காக தான் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஜாதியை வைத்துக்கொண்டு தமிழ் தேசியம் பேச முடியாது. வெட்டப் போவணும் தமிழன், சாபவனும் தமிழன். எப்படி பேச முடியும்? ஜாதியை ஒழித்தால் தான் நாடு முன்னேற முடியும் என்றெல்லாம் பெருமிதமாக புகழாரம் சூட்டி பேசி இருக்கிறார்.

Advertisement