மோடியாக நானும் மணிவண்ணன் அமித்ஷாகாவும் நடிக்க இருந்தோம். படத்தின் பெயர் என்ன தெரியுமா ?

0
748
- Advertisement -

நடிகர் சத்யராஜ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் அவர் சென்றுவரும் அனைத்து அரங்கத்தை கலகலப்பாக வைத்திருப்பார் அந்த வகையில் சில தினங்களுக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மோடி அமித்ஷா அவர்களது பற்றி படம் கலகலப்பாக பேசி வந்தார். அதில் மணிவண்ணன் இருந்து இருந்தால் மோடியாக சத்யராஜ் அமித்ஷாவாக மணிவண்ணன் ஆனாலும் நடித்திருப்பார் என்று அவர் சத்யராஜ் கலகலப்பகாக கூறியிருந்தார்.

-விளம்பரம்-

சத்யராஜ் கூறியது:

செங்கோட்டையினார் கூறும் போது ஏற்கனவே கதையை தயாரித்தது இங்கு வந்து பேசுவது போல இருக்கிறது. கதையின் தலைப்பை கூட தயாராக கூறுகிறார். படத்தின் பெயர் சனாதனம் என்றும் அதில் நான் மோடியாகவும் மணிவண்ணன் அமித்ஷாவாகவும் இருப்பது போல கதையை தயார் செய்து விட்டார் போல. இதற்கு முன்பு என் நண்பன் நிழல்கள் ரவி பெரியார் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வைக்கம் காட்சி நடைபெற்று முடிந்தபின் கேரவேனில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் போது நிழல்கள் ரவி என்னிடம் வந்து நீ மோடியாக நடித்த கரெக்டாக இருக்கும் என்று கூறினார்.

- Advertisement -

அப்போது மோடி அவர்கள் பிரதமராக இல்லை அப்போது அவர் குஜராத்தில் முதல்வராக மட்டுமே இருந்து வந்தார். உங்களுக்கு எல்லாருக்கும் முன்னாடி அதை கண்டுபிடித்து என்னிடம் கூறினார். ஒரே முகத்தில் பல முகங்கள் தெரிவது ஒரு நடிகரின் சிறப்பு. இதில் கொள்கை சித்தாந்தங்கள் அனைத்தும் வேற இருந்தாலும் நடிப்பு என்பது வேறு. தற்போது எனக்கு இந்தி படத்தில் வாய்ப்பு வருகிறது ஏற்கனவே நான் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து முடித்து இருக்கிறேன்.

மீண்டும் இந்த வாய்ப்பு வருகிறது அதில் என்னை சீரடி சாய்பாபா நடிக்க கூறுகிறார்கள். நான் அவரிடம் கூறிவிட்டேன் நான் நாத்திகன் என்றும் படம் முடிந்த பின் அதன் மேடைகளில் நான் கடவுள் இல்லை என்று கூறினால் அந்த படம் ஓடாது உங்களுக்கு நஷ்டமாக விடும் பரவாயில்லை என்று கேட்டேன். எனக்கு நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தால் போதும் நான் மகிழ்ச்சியாக நடித்து விடுவேன். கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் நான் எதை வேண்டுமானாலும் செய்யலாம் அதை படி பார்த்தால் பாகுபலி திரைப்படத்தில் பாகுபலி காலை கட்டப்பா மீது வைப்பார்கள்.

-விளம்பரம்-

ஆனால் உண்மையில் பிரபாஸ் சத்யராஜ் மீது எப்படி கால் வைக்க முடியும். கதைக்கு முக்கியம் என்றால் நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நடிகர் சிவாஜிகணேசன் ஒரு திரைபடத்தில் சிவகுமாரின் கால் கட்டை விரலை வாயில் வைத்து நடித்து இருப்பார் அதில் இருந்து நடிப்புக்காக என்ன என்றாலும் செய்யலாம் என்பது சிவாஜி கணேசன் அன்று கற்றுக் கொடுத்தது சென்று விட்டார். நீ என்றும் சத்யராஜ் கூறியிருந்தால்.

Advertisement