கள்ளக்குறிச்சி விவகாரம் – முன்னரே எச்சரித்துள்ள எம் எல் ஏ – பல உண்மைகளை போட்டுடைத்த சவுக்கு சங்கர்.

0
536
savukki
- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமுதூர் கிராமத்தில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறது. 24 ஆண்டுகளாக இந்த பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஸ்ரீமதி இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்த பள்ளியில் தங்கி படிக்க ஏதுவாக ஹாஸ்டல் வசதி உள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி ,மாணவி ஹாஸ்டலின் சேர்ந்துள்ளார். இந்நிலையில்தான் ஜூலை 13ம் தேதி காலை 6 மணிக்கு மாணவியின் பெற்றோரை பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து கொண்டு, மாணவி பள்ளியின் மாடியிலிருந்து கீழ் குதித்துவிட்டார் என்றும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்றும் கூறியுள்ளனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மாணவி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி காங்கிரஸ் எம்எல்ஏ பள்ளி நிர்வாகத்தினரிடம் பள்ளிக்கு சிறிது நாட்கள் சீல் வைக்கும் படி கூறியுள்ளார். மக்கள் அமைதியான பிறகு பள்ளியை திறந்து வையுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.இதை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ அந்தபகுதி கலெக்டர் ஸ்ரீதரிடம் நேரில் சென்று இந்த பிரச்சனை மிகப்பெரிய பிரச்சினையாக வளரக்கூடும். ஆகையால் இதில் கூடுதல் கவனம் செலுத்தும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

வாட்ஸ்ப்பில் தூது அனுப்பிய கலவரகாரர்கள் :-

இதனிடையே, மாணவியின் இறப்புக்கு நீதி வேண்டும் என கோரி மாணவியின் பெயர், புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. ட்விட்டர் வலைதளத்தில் மாணவியின் பெயரில் ஹேஷ்டேக் பரப்பப்பட்டன. அதேவேளையில், வாட்ஸ் அப் வழியாக உள்ளூர் அளவில் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாபெரும் போரட்டம் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைய தொடங்கியது. மாணவி படித்த பள்ளி தொடர்பாக ஏற்கனவே சில விரும்பதகாத கருத்துகள் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

திசைமாறிய போரட்டம் :-

இந்நிலையில், ஜூலை 17ம் தேதி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏராளமானோர் பள்ளி இருக்கும் பகுதியில் குவியத் தொடங்கினர். காலை 9 மணிக்கெல்லாம் பல நூறு பேர் அப்பகுதியில் குவியத் தொடங்கினர். திடீரென சிலர் பள்ளியின் நுழைவு வாயிலில் இருந்த சுவற்றில் ஏறினார். அவர்களைபோலீசார் கட்டுப்படுத்த முயன்றபோது, தடுப்புகளை மீறி பள்ளிக்குள் நுழைந்தனர். போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.

-விளம்பரம்-

தீ வைக்கபட்ட பள்ளி வாளகம் :-

இதனிடையே பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்களில் சிலர் தங்கள் கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்த கலவரக்காரர்கள், பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த மேசை, ஃபேன் போன்றவற்றை சேதப்படுத்தியதோடு எடுத்து சென்றனர். சான்றிதழ்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்ததாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ மூலம் அடையாளம் கண்ட போலீசார், நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு தாண்டியும் வீடு புகுந்து கைது செய்து வருகின்றனர். இதுவரை 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அமைதியான சூழல் திரும்பியுள்ளது. எனினும், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

உளவுத்துறை உறங்குகிறதா :-

மாணவி ஸ்ரீமதி இறந்து நான்கு நாட்களாகிய நிலையில் வாட்ஸ்அப் ,இன்ஸ்டாகிராம் மூலம் சமூக வலைதளங்களில் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக வரவழைக்கப்பட்டனர். இந்த போராட்டம் சில மணி நேரங்களில் வன்முறையாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த அளவு மக்கள் கூடுவார்கள் என்பதை போலீசாரும், உளவுத்துறையும் கணிக்க தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் தீவிரமடைந்து அதிகளவில் மக்கள் குவிந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. இதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்த சில மணி நேரங்களில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

Advertisement