அது எவ்ளோ பெரிய டுபாக்கூர் கம்பெனியா இருக்கும் – மோகனுக்கு கிடைத்த விருதை கேலி செய்த சவுக்கு சங்கர். அவரின் பதிலடி.

0
278
mohan
- Advertisement -

யூடுயுபில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி மிகவும் பிரபலமானவர் சவுக்கு சங்கர். யூ டியூபில் மாரிதாஸ் என்ற நபர் பல்வேறு அவதூறுகளை பரப்பி வந்தார். அதனால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். மாரிதாஸ் தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளத்தில் சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு இருந்தார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதித்து வழக்கு போடப்பட்டு இருந்தது. சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சி மாணவி இறப்பில் பள்ளிக்கு சார்பாக தொடர்ந்து பேசி வந்தார் சவுக்கு சங்கர்.

-விளம்பரம்-

மேலும், இவர் அரசியலோடு மட்டும் நின்றுவிடாமல் தொடர்ந்து சினிமா பிரபலங்களை கூட தாக்கி வருகிறார். விக்ரம் படம் வெளியான போது கூட உதயநிதி ஸ்டாலின் அன்பு செழியனை மிரட்டி தான் படத்தை வாங்கி இருந்தார் என்று சர்ச்சையை கிளப்பி இருந்தார். இதுகுறித்து பதிவிட்ட அவர் ‘டாய் ப்ராடுப்பயலே. கமல் கோபுரம் பிலிம்ஸ்க்கு வித்த படத்தை, துபாய்ல இருந்து மதுரை அன்புச் செழியனுக்கு போன் பண்ணி நீ வாங்குனது, மொத்த இண்டஸ்ட்ரிக்கே தெரியும். அளவா புளுகுடா’ என்று பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் திரௌபதி இயக்குனர் மோகனையும் தற்போது சீண்டி இருக்கிறார் சவுக்கு சங்கர். 2016ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மோகன் ஜி. இந்த படத்தை தொடர்ந்து அவர் ரிச்சர்டை கதாநாயகனாக வைத்து திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் பெரும் பேசுபொருளானது.

ருத்ர தாண்டவம் படத்தை தொடர்ந்து தற்போது மோகன் செல்வராகவனை வைத்து ‘பகாசுரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும், செப்டம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மோகனுக்கு பிரபல தனியார் மீடியா சேனல் ஒன்று விருது அளித்து இருந்தது. அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் மோகன். இப்படி ஒரு நிலையில் சவுக்கு சங்கர் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து மோகனின் இந்த பதிவிற்கு ‘உன் படத்துக்கெல்லாம் அவார்ட் குடுக்குதுன்னா, அது எவ்வளோ பெரிய டுபாக்கூர் கம்பெனியா இருக்கணும் ? பெரிய கோல்டன் க்ளோப் வாங்கிட்டான். மூடிட்டு உக்கார்றா முட்ட போண்டா’ என்று கமன்ட் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கு பதில் அளித்த மோகன் ‘நாய்க்கு பிஸ்கெட் போடுவது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஆனால், உண்மையில் அது சவுக்கு சங்கரின் உண்மையான ட்விட்டர் கணக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது தெரியாமல் அந்த ஐடிக்கு தேடி பிடித்து ஒரு நாயின் புகைப்படத்தை போட்டு மோகன் பதில் அளித்து இருப்பது தான் வேடிக்கை.

Advertisement