மீண்டும் பிரபல நடிகையுடன் காதலா..? சர்ச்சையில் சிக்கிய பிரபு தேவா.! சினிமா வட்டாரம் கிசுகிசு.!

0
593
Prabu-Deva

இந்திய மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா, நயன்தாரா, ஹன்சிகா என்று வரிசையாக காதல் கிசுகிசுவில் சிக்கினார். இதில் நயன்தாராவுடனான காதல், திருமணம் வரை பேசப்பட்ட நிலையில் தீடிரென்று அந்த காதலும் முறிந்துவிட்டது. இந்நிலையில் பிரபுதேவா, இளம் நடிகை சாயிஷாவை காதிலித்து வருவதாக ஒரு பேச்சு தற்போது நிலவி வருகிறது.

Sayesha-Saigal

நடிகர் பிரபு தேவா, தற்போது இந்தியில் சல்மான் கானை வைத்து ‘தபாங்-3’ படத்தை இயக்கி வருகிறார். அதுபோக தமிழில் நடிகர் கார்த்திக் மற்றும் விஷாலை வைத்து ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை சாயிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக பிரபுதேவா, 21 வயதே ஆனா இளம் நடிகை சாயிஷாவை காதலித்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இளம் நடிகையான சாயிஷா, நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால் அடிக்கடி நடனமாடி அதனை வீடியோ பதிவிட்டு தனது சமூக வலைத்தளத்தில் வருகிறார். மேலும், இவர் பிரபுதேவாவின் தீவிர ரசிகையும் ஆவார். இந்நிலையில் நடிகை சாயிஷா கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தனது 21 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டனர்.

Sayesha-Saigal-and-prabhu-deva

மேலும், இந்த விழாவில் நடிகரும், இயக்குனருமான பிரபு தேவாவும் கலந்து கொண்டார். பெரும்பாலும் நடிகைகளின் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்ளாத பிரபுதேவா சாயிஷாவின் பிறந்தநாள் விழாவில் மட்டும் கலந்து கொண்டுள்ளார். மேலும், சாயிஷாவை சந்தித்து அவருடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளது இவர்கள் இருக்கருக்கும் இடையேயான நெருக்கத்தை மேலும் ஊர்ஜிதபடுத்தியுள்ளது.