நயன்தாரா, யாஷிகாவை தொடர்ந்து யோகி பாபுவுடன் இணைந்துள்ள இளம் நடிகை!

0
334
yogibabu

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியன் யார் என்று கேட்டால் அது சந்தேகமே இல்லாமல் யோகிபாபு தான். குறிப்பிட்ட காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா என்று அணைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்துவிட்டார் யோகி பாபு.

தற்போது 17 படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் யோகி பாபு விஜய் 63 படத்திலும் நடித்து வருகிறார். அது போக தர்ம ராஜா, குர்கா ,ஜாம்பி போன்ற பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாட்ச்மேன்’. இந்த படத்துக்கான விளம்பர பாடல் ஒன்று படமாக்கப்படுகிறது. இதில் நடிகை சாயிஷாவுடன் இணைந்து யோகி பாபு நடனம் ஆடுகிறார். ராப் வகை பாடலான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகை சாயிஷா தற்போது சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்தார் யோகி பாபு என்பது குறிப்பிடத்தக்கது.