அடுத்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இவரை அனுப்புங்க. மேடையில் கூறிய ஆர்யாவின் மனைவி. வீடியோ இதோ.

0
17209
sayesha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பின் 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை.

-விளம்பரம்-
Image result for enga veetu pillai arya

- Advertisement -

நடிகர் ஆர்யா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 16 பெண்களில் இருந்து தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், இறுதி வரை அவர் அந்த பெண்களில் இருந்து யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. எதற்காக இந்த நிகழ்ச்சி, ஒரு வேளை டிஆர்பி ரேட்டிங்காகவா? உண்மையாகவே ஆர்யாவின் திருமணத்திற்கு பெண் தேடுவதற்காக நடந்ததா? என்று இன்னும் வரை இந்த நிகழ்ச்சி புரியாத புதிராகவே உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகை சங்கீதா கிரிஷ் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். சமீபத்தில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வொண்டர் வுமன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நடிகை சாயிஷாவுக்கு டான்சிங் சென்சேஷன் ஆப் சவுத் இந்தியா என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருது வாங்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை சாயிசா. இந்த விருது வாங்கிய பிறகு தொகுப்பாளர்கள் சாய்ஷாவிடம் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன் 2 நிகழ்ச்சி வந்தால் யாரை வைத்து பண்ணலாம் என்று உங்கள் சக்ஜெக்ஷன் கொடுங்க என்று சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-
Galatta WOW Awards | Dancing Sensation of South India – Sayyesha

நடிகை சாயிஷா நம்ம வீட்டு மாப்பிள்ளை – 2nd Seasonக்கு யாரை suggest பண்ணாங்க தெரியுமா..?? ??#GalattaWonderWomenAwards | #Sayyesha | #STR | #HBDSTR

Colors Tamil ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಜನವರಿ 30, 2020

அதற்கு நடிகை சாயீஷா அவர்கள் கூறியது, எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன் 2 நிகழ்ச்சிக்கு சிம்பு வந்தால் ஓகே. ரசிகர்களின் விருப்பம் தான் என்னுடைய விருப்பமும் என்றும் சொல்லியிருந்தார். தற்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உண்மையை சொல்லப்போனால் அந்த நிகழ்ச்சிக்குப் போன பிறகு தான் ஆர்யாவுக்கு திருமணம் ஆனது என்று சொல்கிறார்கள்.அதே போல் இப்போ சீசன் எங்க வீட்டு பிள்ளை சீசன் 2 நிகழ்ச்சிக்கு சிம்பு வந்தால் சரியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement