உங்களை இந்த மாதிரி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. ஆர்யா வீடியோவால் பீல் செய்த சயீஷா

0
40274
arya

தமிழ் சினிமா உலகில் பிளேபாயாக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பின் 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை. உண்மையாலுமே இந்த நிகழ்ச்சி ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சி என்றே பலரும் நம்பினார்கள். ஆனால், அது எல்லாம் நிகழ்ச்சிக்காக தான் என்று தெரியவந்தது. மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த மகாமுனி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் ஆர்யா அவர்கள் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வரும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘சல்பேட்டா பரம்பரை’ என்று பெயர் வைத்து உள்ளனர். சினிமாவுக்காக தங்கள் உடலை வருத்திக் கொள்ளும் எத்தனையோ ஹீரோக்களை நாம் பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

இப்போது ஆர்யா மேற்கொள்ளும் பயிற்சி மிகவும் மனதை வாட்டும் அளவிற்கு உள்ளது. இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா அவர்கள் கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படி அவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஆர்யாவின் உடலில் விழும் ஒவ்வொரு அடிகளும் இடி போல் விழுகின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா அவர்கள் இந்த வீடியோவை பார்த்து கூறியிருப்பது, உங்களை இந்த மாதிரி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. அதிக கடின உழைப்பு போடுகிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார். ஆர்யாவின் உடற்பயிற்சி வீடியோவும், நடிகை சாயிஷாவின் ட்விட்டும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

மேலும், ஆர்யா உடன் இந்த படத்தில் சத்யராஜ், கலையரசன் மற்றும் தினேஷ் ஆகியோரும் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. வட சென்னை பின்னணியில் குத்துச் சண்டையை மையமாக வைத்து த்ரில்லர் களத்தில் இந்தப் படத்தை இயக்குகிறார் ரஞ்சித். இந்தப் படத்துக்காக ஆர்யாவும், கலையரசனும் கடந்த சில மாதங்களாகக் குத்துச்சண்டைப் பயிற்சிப் பெற்று வருகின்றனர். இதன் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் சென்னையில் தொடங்கியது. இந்த படத்தில் முதலில் ஆர்யா பருமனான உடல் அமைப்புடன் இருந்து பின் கடும் முயற்சியில் ஈடுபட்டு கட்டுமஸ்தான உடலுடன் மாறினார் என்றும் படக்குழுவினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement