பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியவில – தனது யூடுயுபில் வருத்தம் தெரிவித்த சயீஷா. இதான் காரணமாம்

0
114
- Advertisement -

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வருத்தம் தெரிவித்து நடிகை சாயிஷா பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய்ஷா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இப்படத்திற்கு பிறகு இவர் “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Arya-Sayesha

இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதனை அடுத்து இவர் ஜூங்கா, கஜினிகாந்த், டெடி போன்ற படங்களில் நடித்தார். பிறகு இவர் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின் நடிகை சயீஷாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. சாய்ஷா கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான “யுவரத்னா” என்ற கன்னட படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு படத்தில் நடிக்காமல் இருந்தார் சாய்ஷா.

- Advertisement -

சாயிஷா திரைப்பயணம்:

மேலும், இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் சிம்பு நடித்த “பத்து தல” படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து இருக்கிறார் . இந்த படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர், அனு சித்ரா என நடிகர் பட்டாளமே நடித்து இருக்கிறது .இந்த படத்தில் வரும் “அடாவடி” என்ற பாடலுக்கு நடிகை சாய்ஷா கவர்ச்சியான நடனம் ஆடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து இவர் படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

சோசியல் மீடியாவில் சாயிஷா :

இது ஒரு பக்கம் இருக்க, சாயிஷா எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவர் தன்னுடைய குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் மிக்ஸாம் புயல் தொடர்பாக சாயிஷா வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காக வெளியில் சென்றேன்.

-விளம்பரம்-

சாயிஷா பதிவு:

அப்போதுதான் மக்களின் மோசமான நிலைமையை நான் உணர்ந்தேன். நாங்கள் இருக்கும் ஏரியா ரொம்ப தாழ்வான பகுதியில் இல்லை. அதோடு வெள்ளம் வந்தாலும் எங்கள் பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால், இந்த முறை கிட்டத்தட்ட வீட்டின் படி வரை மழை நீர் நிரம்பி வழிந்தது. இதைவிட மோசமான பல சூழ்நிலைகளை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். வெளியில் சென்று மக்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். ஆனால், வீட்டில் ஒரு குழந்தை இருப்பதால் வெளியில் வரவே பயமாக இருந்தது. நீங்கள் அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

மிக்ஜாம் புயல்:

கடந்த சில வாரமாக சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருந்தது. கடந்த ஒரு வாரமாக சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இதனால் பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். தற்போது மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

Advertisement