வடிவேலுவால் தான் என் வாழ்க்கை போனது என்று நடிகர் நகைச்சுவை நடிகர் சிசர் மனோகர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் சிசர் மனோகர். இவர் முதலில் தயாரிப்பு உதவியாளராக தான் பணியாற்றி இருந்தார். அதற்கு பின்னர் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது கோகுலத்தில் சீதை என்ற படத்தின் மூலம் தான்.

அதை தொடர்ந்து இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் இதுவரை 240க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக பெரிதாக இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் இவர் மயில்வான் ரங்கநாதன் நடத்தி வரும் youtube சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது, நான் முதலில் தயாரிப்பு குழுவில் இருந்தேன்.

Advertisement

சிசர் மனோகர் அளித்த பேட்டி:

அங்கு உணவு பரிமாறுவது முதல் அனைத்து வேலைகளையுமே செய்து இருந்தேன். அதேபோல் வடிவேலுவும் ராஜ்கிரன் புரொடக்ஷன் கம்பெனியில் என்கூட தான் வேலை செய்திருந்தார். ராஜ்கிரன் பட சூட்டிங்கில் வடிவேலு காமெடி செய்ததை பார்த்து கவுண்டமணி யார்? என்று விசாரித்தார். அப்போது நான் அவரிடம் வடிவேலு ஒரு மதுரைக்காரர் என்று சொன்னேன். உடனே அவர் ராஜ்கிரனை கூப்பிட்டு இங்கே நிறைய ஆட்கள் இருக்கும்போது நீங்கள் ஏன் மதுரையில் இருந்து அவரை கூட்டி வந்து நடிக்க வைக்கிறீர்கள் என்று கோபப்பட்டார்.

வடிவேல் குறித்து சொன்னது:

பின் ராஜ்கிரணும் கவுண்டமணியை சமாதானம் படுத்தினார். அது மட்டும் இல்லாமல் இந்த சீனோடு அவனை அனுப்பி விடணும். இனிமேல் அவனை நடிக்க வைக்க கூடாது என்றெல்லாம் சொன்னார். இருந்தாலும், வடிவேலு நிச்சயம் பெரியாளாக வருவார். அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று நான் பேசினேன். ஆனால், அவர் எனக்கே ஆப்பு வைத்து விட்டார். பகவதி படத்தில் இன்னொரு வடிவேலுவாக நான் நடிக்க வேண்டியது. அது மட்டும் இல்லாமல் வடிவேலுவால் தான் எனக்கு நிறைய படம் போனது. வடிவேலுக்கு ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததே நான் தான்.

Advertisement

வடிவேலுவின் மீதான கோபம்:

மேலும், அவர் இந்த நிலைமையில் நல்லா இருப்பதற்கு காரணமும் நான் தான். ஆனால், அவர் என் வாழ்க்கையில் விளையாடிவிட்டார். அடுத்தவங்க வாழ்க்கையில் அவர் ஏன் தலையிடுகிறார்? என்று தெரியவில்லை. பகவதி படத்தின் போதே நான் வடிவேல் மீது கடும் கோபத்தில் இருந்தேன். சீமான் மட்டும் இல்லை என்றால் வடிவேலுவை முடித்து இருப்பேன். எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதால் பொறுமையாக இருந்தேன்.

Advertisement

வடிவேலுடன் கடைசியாக நடித்த படம்:

நம்ம வளர்த்த ஆளு, நாம வாய்ப்பு வாங்கி கொடுத்தோம். ஆனால், நமக்கே அவர் வாய்ப்பு கிடைக்காமல் பண்ணுறாரு நினைத்து எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவருடன் நான் சேர்ந்து நடிக்க வில்லை. கடைசியாக இம்சை அரசன் படத்தில் சிம்புதேவன் ஒன்னா நடிக்க காரணமாக இருந்தார். அந்தப்படத்திலும் எனக்கு இருந்த நிறைய சீன்களை கட் பண்ணது வடிவேல் தான். நான் அடுத்த கட்டத்துக்கு போய்விட கூடாது என்று தான் இவர் இந்த வேலையை பார்த்து இருக்கிறார் என்று பல விஷயங்களை மனம் திறந்து சிசர் மனோகர் கூறியிருந்தார்.

Advertisement