இவர் யார் , இவர் நடிகர் விஜய்க்கு என்ன சொந்தம் என்று தெரியமா ? விவரம் உள்ளே !

0
2850

தளபதி விஜய்க்கு சஞ்சய் எனற ஒரு மகனும் திவ்யா என்ற ஒரு மகளும் இருப்பது நமக்கு தெரியும். அதேபோல் விஜயின் சித்தப்பா பையன் தான் விக்ராந்த் என்பது கூட நமக்கு தெரியும். ஆனால், விஜய்க்கு மருமகன் முறையில் ஒரு நடிகர் இருக்கிறார், அது யார் தெரியுமா?
hari-prasath-actorஆம், விஜயின் அம்மா ஷோபனாவின் அண்ணன் சுரேந்திர பிரசாத். இவர் ஒரு பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட். இவர் மொத்தம் 500 படங்களுக்கு மேல் டப்பிங் செய்துள்ளார். நடிகர் மோகனுக்கு பெரும்பாலும் டப்பிங் செய்தவர் சுரேந்திர பிரசாத் தான். 200 பாடல்களும் பாடியிருக்கிறார்.

சுரேந்திர பிரசாத்தின் மகன் தான் ஹரி பிரசாத். இவர் தான் விஜய்க்கு மருமகன் முரையாவர். சென்னை 28 முதல் பாகத்தில் Bad Boys அணியின் கேப்டன் சிறுவனாக வந்து வெற்றி பெறுவார் தெரியுமா அவர் தான் இந்த ஹரி பிரசாத். இதற்கு முன்னர் அந்நியன் படத்தில் சின்ன வயது அம்பி கேரக்டரில் கூட நடித்திருப்பார்.
hari prasath
சென்னை 28 இரண்டாம் பாகத்தில் மீண்டும் அதே Bad Boys அணியின் கேப்டனாக செம்ம மாஸாக வருவார். தற்போது அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை எனினும், எப்பபோது உங்கள் மாமா தளபதி விஜய் போல் நடிக்க உள்ளீர்கள் என கேட்டதற்கு, அவர் ஸ்டைலியிலே ஐ ஆம் வெயிட்டிங் என கெத்தாக கூறுகிறார். இவருக்கு தற்போது 25 வயது ஆகிறது.