பிக் பாஸ் ரம்யாவின் ‘Hair Style’ பின்னால் இருக்கும் ரகசியம்..! அவரே சொன்ன உண்மை.!

0
1507
Ramya-Singer

இந்த ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் சில பேர் நமக்கு பரிட்சியமான முகமாக இருந்தாலும். பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுக விழாவில் ரம்யா , தான் என் எஸ் கே குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறிய பின்னர் தான் அவர் யாரென்ரே தெரிந்தது.

Ramya-NSK

பழம் பெரும் நகைச்சுவை நடிகரான என் எஸ் கே, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பொக்கிஷ கலைஞராக திகழ்ந்து வந்தார். அவரது குடும்பத்தில் இருந்து வந்ததால் இவருக்கு என் எஸ் கே ரம்யா என்று பெயர் வந்தது. பிக் பாஸ் ரசிகர்கள் இவரை முதலில் தொலைகாட்சியில் பார்த்த போது அனைவரின் கண்களும் இவரது வித்யாசமான ஹேர் ஸ்டைல் மீது தான் இருந்தது.

அதே போல என் எஸ் கே வும் அவரது ஹேர் ஸ்டைலிற்கு மிகவும் பெயர் போனவர். ரம்யா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு சில மாதங்கள் வரை அவரது தாத்தா என் எஸ் கே போல தான் ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தனது தாத்தாவின் நினைவிற்காத தான் ரம்யா இது போன்ற ஹேர் ஸ்டைலை வைத்திருந்தாரோ என்று ஐயமும் ஏற்படுகிறது.

Singer-Ramya

சமீபத்தில் தான் ரம்யா, தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டார். ஆனால், பல ஆண்டுகளாக தனது தாத்தாவை போல ஹேர் ஸ்டைலை தான் வைத்திருந்தாராம். எனக்குள் என் எஸ் கேவின் ரத்தம் இருக்கிறது அதனால் தான் நான் அவரை போலவே ஹேர் ஸ்டைலை வைத்தேன் என்று , ரம்யா 2013 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ரம்யா ஒரு பின்னணி பாடகி, 2008 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி இசையமைத்த “பந்தயம் ” என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார், அதன் பின்னர் தமிழ், கன்னடம் போன்ற பல படங்களில் பாடியுள்ளார். 16 வருடங்கள் இசையை முறைப்படி கற்ற ரம்யா, கர்னாடிக் மற்றும் ராப் பாடல்களை பாடுவதில் வல்லவர். என் எஸ் கே குடும்பம் இல்லையா, அப்படி தானே இருக்கும்.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.