விஜய் மகன் சஞ்சய் பெயருக்கு பின்னல் இப்படி ஒரு ரகசியமா..? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே

0
2133
Sanjay-and-vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இன்று அவருடைய 44 வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் பல நலத்திட்டங்களை செய்து கொண்டாடி வருகின்றனர். அதோடு விஜய்யின் ‘சர்கார்’படத்தின் போஸ்டரும் இன்று வெளியாகி இருப்பதால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

actor-vijay

- Advertisement -

விஜயின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்களுக்கு விஜயின் மகன் பற்றிய ஒரு சிறிய தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது . நடிகர் விஜய் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு சஞ்சய்` என்ற மகனும் ஷாஷா எம்சர மகளும் பிறந்தனர்.

விஜயின் மகன் சஞ்சய் தற்போது தான் தனது 12 ஆம் வகுப்பை முடித்தார். சஞ்சய்யின் பெயருக்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறதாம். அது என்னவென்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது. sanjay என்ற பெயரில் விஜய் மனைவி sangeetha பெயரில் உள்ள san என்ற எழுத்தையும் மற்றும் vijay பெயரில் இறுதியில் உள்ள jay என்ற எழுத்தையும் இணைத்தே  ‘sanjay’ (sangeetha ,vijay – san+jay=sanjay)என்று அவருக்கு பெயர் சூட்டியுள்ளனராம்.

-விளம்பரம்-

sanjay

தற்போது சஞ்சய் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு படம் தயாரிக்கும் மேற் படிப்பை படிக்க வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் , அவருக்கு தனது தந்தை விஜயை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது தான் ஆசை என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement