லட்சுமி குறும்படத்தில் இதை கவனித்தீர்களா? இது தெரியாம லட்சுமிய கெட்டவனு நெனைச்சிட்டீங்களே!

0
5005
lakshmi

கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் லட்சுமி தான் ஹாட் டாபிக். யூடியூபில் வெளியான லட்சுமி என்ற குரும்படம் ஒரு பெண்ணின் இயந்திர வாழ்க்கையில் ஏற்படும் சபலங்களையும் அவற்றைக் எடுத்துக்கொள்ள அவள் நாடும் உறவினையும் பற்றி கூறுகிறது.
lakshmi படம் யூடியூபில் இயக்குனர் கௌதம் மேனனின் சேனலான ‘ஒன்றாக என்டெர்டைன்மன்ட்டில்’ வெளியானது. வெளியானதும் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டது.

இந்த குறும்படத்தில், எப்போதும் போல் ஒரே மாதிரியான சக்கரம் போல் சுத்தும் அலுப்பு வாழக்கையில், சிறிது நேரம் கூட முகம் கொடுத்து மகிழ்ச்சியாக பேசாத கணவரின் மத்தியில் தாம்பத்திய உறவில் கூட மகிழ்ச்சியில்லாத மனைவியாக நடத்தப்படுகிறாள்.

இதையும் படிங்க: 25 வருட சினிமா பயணம்! விஜய்க்கு “தளபதி யுகம்” என்ற பாடல் வெளியீடு? பாடல் வரிகள் உள்ளே
lakshmi இதனால் சந்தர்ப்பத்தினால் வேறு ஒரு ஆடவன் அவளை கவர, அவனுடன் உறவு கொண்டு வீடு திரும்பிகிறாள். இது தான் கதை. சமூக வலை தளத்தில் இரு வேறுவகையான விமர்சனத்தையும் சந்தித்தது இப்படம். பெரும்பாலும் பெண் நடத்தை கெட்டவளாகி விட்டால் என அந்த கதாபாத்திரட்தை வசை பாடுகின்றனர்.
ஆனால், படத்தில் இதையெல்லாம் கவனித்தால், லட்சுமியை கெட்டவள் என்று கூற சற்று யோசிப்பார்கள்,

படத்தில் வரும் பிலாக் அன்ட் வைட் காட்சி கள் :

படத்தில் கனவருடன் வரும் காட்சிகளை பிலாக் அன்ட் வைட்டிலும் தன் கள்ளக் காதலுடன் வரும் காட்சியை கலரிலும் காடியிருப்பார் இயக்குனர். இது, அவளது கனவருடன் வாழ்ந்தது நிகழ்காலமாகவும், அவளது கள்ளக்காதலனுடன் வாழ்ந்தது கடந்த காலமாகவும் காட்டியிருப்பார் இயக்குனர். பொதுவாக பிலாஸ் பேக்கை பிலாக் அன்ட் வைட்டில் காட்டுவது வழக்கம், ஆனால் இந்த படத்தில் அதற்கு உல்டாவாக காட்டியிருக்கிறார் இயக்குனர். இது வித்யாசமான பெண்ணைக் குறிக்கிறது.
lakshmi கனவனின் கள்ளத் தொடர்பு :

தன் கனவன் வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் என்பதை அறிந்த லட்சுமி, தூங்கும் போது அதனை நினைத்து அழுது பின்னர், இப்படி இருந்தால் யாருக்குத் தான் தப்பு செய்யத் தோனாது என ஒரு காட்சி வைத்திருப்பார் இயக்குனர். மேலும், ஆசையில்லாமல் கணவர் லட்சுமியுடன் வைத்துக்கொள்ளும் உறவும் கூட அவளுக்கு போதாதது போல் காண்பித்திருப்பார் இயக்குனர். இதனால் கூட அவள் அன்று இரவு வழி மாறி போய்விட்டார் எனவும் ஜஸ்டிபை செய்திருப்பார் இயக்குனர்.

என்ன இருந்தாலும், கண்ணியம் காப்பாற்ற திருந்திய லட்சுமி படத்தில் அந்த இரவு முடிந்து அடுத்த நாள் லட்சுமி பஸ்சில் செல்வதாக கூறுவார். என்னதான் அன்று இரவு உணர்ச்சிகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்த இயலாமல் லட்சுமி அப்படி சென்று இருந்தாலும், இனிமேல் இப்படி நடந்து விடக் கூடாது என அவளது கள்ளக் காதலனை அவாய்ட் செய்ய, தினமும் ட்ரெய்னில் செல்லும் அவள் அன்றிலிருந்து பஸ்சில் செல்வாள்.
lakshmi லட்சுமி செய்தது தவறு தான், ஆனால் இப்போது கூறுங்கள் லட்சுமி நல்லவளா? இல்லை கெட்டவளா?