எனக்கு பின்பு அவர் தான் சூப்பர்ஸ்டார்னு ரஜினியே சொல்லிவிட்டாரே – சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து சீமான்.

0
427
Seeman
- Advertisement -

தமிழ் சினிமாவில் யார் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை கடந்த ஆண்டிலிருந்தே ஒரு விவாத பொருளாக பேசப்பட்டது வருகிறது. ஆனால் இது பெரிய சர்சையாக வெடித்தது சமீபாத்தில் வெளியான “வாரிசு” படத்தின் மூலம் தான். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றும் கூறியது பெரிய சர்ச்சையாக மாறியது. அதோடு நடிகர் சரத்குமாரும் சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று தான் சூரியவம்சம் விழாவிலே கூறியதாக சொல்ல எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல ஆகியது.

-விளம்பரம்-

பத்திரிகையாளர் பிஸ்மி :

அதற்குப் பிறகு சோசியல் மீடியாக்களிலும் இந்த பிரச்சனை தொடங்க ஆரம்பித்தது விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் தங்களுடைய நடிகர் தான் சூப்பர் என்று விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பல விதமான மீம்களையும் போட்டு ஒருவரை கூறுவர் கலாய்த்தும் வந்தனர். இந்நிலையில் விஜய் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர்ஸ்டார் என்பதை தயாரிப்பாளர் தில் ராஜு கூறவேண்டிய அவசியம் இல்லை. தமிழ் சினிமாவின் ரசிகர்கர்களே விஜய்யை அந்த இடத்திற்கு கொண்டு வைத்து விட்டார்கள் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

வீடு முற்றுகை :

இந்த நிலையில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் 10 பேர் பத்திரிகையாளரான பிஸ்மியின் இல்லத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு யூடியூபில் ரஜினிக்கந்தை விமர்சித்து போட்டுள்ள பதிவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் ரஜினி ரசிகர்களின் இந்த செயலை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து சீமான் :

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பிரபல ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் யார் சூப்பர்ஸ்டார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான் “அப்போது ரஜினிகாந்த ஐயா இப்போது என் தம்பி விஜய் என அசால்ட்டாக பதில் சொல்லிவிட்டார். மேலும் அவர் கூறுகையில் “சூப்பர்ஸ்டார் என்பது ஒரு பட்டயம் கிடையாது. அது ஒரு பெருமை தரக்கூடிய ஒரு பட்டப்பெயர் அவ்ளவுதான்.

-விளம்பரம்-

விஜய்தான் சூப்பர் ஸ்டார் :

கடந்த காலத்தில் தியாகராஜ பாகவதர் இருந்தார்கள், அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் வந்தார், அதற்கு பிறகு ரஜினிகாந்த் வந்தார். இந்நிலையில் தற்போது தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் விஜய் தான். அதோடு ஒரு தமிழர் தமிழ் நாட்டில் வளர்ந்துவருவதை மகிச்சியாக கொண்டாட வேண்டியது தானே. இதனை ரஜினிகாந்த் ஐயாவே ஒப்புக்கொள்வார். அவருடைய சில ரசிகர்கள் இந்த மாதிரியான விஷியங்களை செய்தாலும் ரஜினி ஒரு மேடையில் விஜய் அந்த இடத்திற்கு வந்துவிட்டார் என கூறியிருக்கிறார்.

சூப்பர்ஸ்டார் என்பது குறித்து சீமான் :

ஒரு உயர்ந்த சினிமா நட்சத்திரம் என்பவர் குழந்தைகள் முதல். பெண்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், பெரியவர்கள் என அணைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கபட வேண்டும். அப்படி தொடக்கத்தில் எம் .ஜி.ஆர் இருந்தார், அதற்கு பிறகு ஐயா ரஜினிகாந்த் வந்தார், தற்போது தம்பி விஜய் இருக்கிறார் என்று கூறினார் சீமான். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இப்படி பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியால் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Advertisement