தற்போது விவாதங்கள் மழை போல் பெய்து முடிந்து பட பிரச்சனையும் ஒரு வழியாக முடிந்த பின் கேமராவை அப்படியே ரஜினி பக்கம் திருப்பியுள்ளனர் சமூக வலைதள வாசிகள். தற்போது அவர்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் ரஜினியைப் பற்றி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:
ரஜினி போர் வரும்போது மட்டுமே பேசுவார், மற்ற நேரங்களில் பேச மாட்டார் என நக்கல் தொனியில் ரஜினியை விமர்சித்துள்ளார்.
எப்படியும் ரஜினி இதற்க்கும் எதுவும் பேச மாட்டார் என்பது அனைவருக்கு தெரிந்த ஒன்று. தன் நிலை என்ன என்பதையே அவ்வப்போது தோன்றும் சமூக பிரச்சனைகளில் தெரிவிக்காத ஒருவரைத்தான் ஒரு பகுதி தமிழ் சமூகம் தமிழகத்தை ஆள அரசியலுக்கு அழைக்கிறது என்பது எதாற்த்தமான ஒரு பதிவு.




