பல வருட குறை தீர்ந்தது.! அப்பாவானார் சீமான்.! புகைப்படம் இதோ.!

0
680

நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்களும் கட்சி நிருவாகிகளும்,தொண்டர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். சீமான் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

சீமானின் திருமணம் தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், சீமான் – கயல்விழி தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.இதனை பலரும் ஏளனமும் செய்து வந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அண்ணனுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்,மேலும், தனது குழந்தையை கையில் ஏந்தியவாறு சீமான் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.