அக்கா தாமரை எழுதிய இந்த பாடலை எண்ணெற்ற முறை கேட்டு கொண்டு இருக்கிறேன் – ‘மல்லிப்பூ’ பாடலை பாராட்டி சீமான் போட்ட பதிவு.

0
532
seeman
- Advertisement -

வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் குறித்து சீமான் போட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்தபடத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் ஏ ஆர் ரகுமான் இசைகளும் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் படத்தில் இடம்பெற்ற மல்லி பூ பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த பாடலை பாடகி மதுஸ்ரீ பாடியிருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் மருதாணி, மயிலிறகே மயிலிறகே, கண்ணன் வரும் வேளை போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் பாடிய மல்லிப்பூ பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : ராஜராஜசோழன் இந்துவா ? – வெற்றிமாறன் பேச்சுக்கு கல்கியின் பேத்தி பளிச் பதில். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

மல்லிப்பூ பாடல் குறித்து சீமான் :

இந்த நிலையில் மல்லிப்பூ பாடலை பல முறை கேட்டு ரசித்து வருவதாக சீமான் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘என்னுடைய அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா கவிஞர் தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.  

-விளம்பரம்-

அக்கா தாமரை :

அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது. கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடுஇணையற்ற இசைத்தமிழன் அன்புஇளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

பேரன்பும், வாழ்த்துகளும் :

உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்! அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கௌதம் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேசன்  அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..! ” என்று குறிப்பிட்டுள்ளார். சீமானின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Advertisement