கடந்த சில வருடங்களாக சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வரும் விஜயலக்ஷ்மி தற்போது சீமானால் அனைத்தையும் இழந்து நிற்பதாக கண்ணீர் மல்க பேசிஇருக்கும் விஜயலக்ஷ்மி சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதோடு தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்ததாக புகார் அளித்து இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவர் 1997 ஆம் ஆண்டு நாகமண்டலம் என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழில் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.
விஜயலக்ஷ்மி திரைப்பயணம்:
பின் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார். மேலும், சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
தன்னை 7 முறை அனுமதியின்றி வலுக்கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி கருக்கலைப்பு செய்துள்ளதாக சீமான் மீது அண்ணியார் விஜியலெக்ஷ்மி குற்றச்சாட்டு… pic.twitter.com/6RWRgAUn8I
— U2 Brutus (@U2Brutus_off) August 28, 2023
சீமான்-விஜயலக்ஷ்மி பிரச்சனை:
இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று விஜயலக்ஷ்மி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். ஆனால், சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
மீண்டும் சீமான் மீது புகார் :
அந்த புகாரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து சீமான் என்னை திருமனம் செய்து கொண்டார். கோவிலுக்கு வெளியே மாலையை மாற்றிக்கொண்டோம். பிறகு அங்கிருந்து அவர்கள் மாங்கல்யம் கட்ட சொல்லும்போது சீமான் அவர்கள் நான் “பெரியார் கொள்கை பின்பற்றுபவன் மற்றும் நான் கிறிஸ்தவர்” என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கு கொள்கைக்கும் எதிரானது என்று மாங்கல்யம் கட்ட மறுத்து மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம்.
அன்றில் இருந்து சீமான் அவர்களை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம். பின்பு நமது திருமணம் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் உலகம் போற்றும் வகையில் நாம் நடத்த வேண்டும் அது வரையில் இந்த திருமணத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார். அன்றைய தினத்தில் எனக்கும் சீமான் அவர்களுக்கு அந்த விடுதியில் சாந்திமுகூர்த்தம் நடந்தது.
அந்த சாந்திமுகூர்த்தம் பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடும் உறவினர்களின் ஆசிர்வாதத்தோடும் நடைபெற்றது. நான் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட போது அரசியலில் ஒரு நிலைக்கு வரும் வரை ககுழந்தை வேண்டாம் என்று சொன்னதாகவும் இதனால் 7 முறை வலுக்கட்டாயமாக தன்னை கருக்கலைப்பு செய்ததாகவும் அந்த புகாரில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டுள்ளார் விஜயலக்ஷ்மி.
சீமான் பதில் :
மேலும், சீமான் தன்னிடம் இருந்து 60 லட்சம் பணம் 35லட்சம் மதிப்பிலான நகைகளை பெற்றதாகவும், பணம் தர மறுத்தால் தன்னை அடித்து பணம் பரித்து செல்வார் என்றும் கூறி இருந்தார் விஜயலட்சுமி. இப்படி ஒரு நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது ‘இதுவரை பல கேள்விகள் கேட்டீர்கள் இப்போது எதற்கு ஒரு கேவலத்தை கேட்கிறீர்கள். நான் இந்த விஷயத்தில் மிகவும் அமைதியாக கடந்த போக வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை நேசிக்கும் பல கோடி குடும்பங்கள் இருக்கிறது. எனக்கு மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், குடும்பம் இருக்கிறது, சொந்த பந்தம் இருக்கிறது. இதைப் பற்றி திரும்பத் திரும்ப பேசுவது மிகவும் கேவலமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.