சவால் விட்ட லாரன்ஸ்.! சரணடைந்த சீமான்.! என்ன ஒரு அந்தர் பல்டி.!

0
755
Seeman-Lawrance
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக லாரன்ஸ் மற்றும் சீமானுக்கு இடையிலான கருத்து மோதல் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
ராகவா லாரன்ஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றினை எழுதியிருந்தார்.

-விளம்பரம்-

அந்த பதிவில், நாம் தமிழர் கட்சியை நேரடியாக குறிப்பிடாமல், அவர்களது தொண்டர்கள் தமக்கும், தன்னுடைய மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினர் தன்னைத் தொடர்ந்து அவதூறாகப் பேசிவருவதாகவும் அதற்கெல்லாம் காரணம் முதன்முதலில் நீங்கள் என்னை மேடையில் விமர்சித்ததுதான் ஆரம்பம் என சீமானை நோக்கிக் கேட்கும் விதமாக எழுதியிருந்தார். 

- Advertisement -

இதை பிரச்னையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம்”* என நீங்கள் முடிவெடுத்தால் அதற்கும் நான் தயார். சமாதானமா? சவாலா? முடிவை நீங்களே எடுங்கள் என்று குறியிருந்தார் லாரன்ஸ். இந்த நிலையில் லாரன்ஸ்சின் கேள்விக்கு தற்போது சீமான் விளக்கமளித்துள்ளார்.

சீமான்

அதில், லாரன்ஸ் மீதும் அவரின் சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு.யாராவது ஒருவர் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம். எனது கட்சியில் அவ்வாறு செய்திருந்தால் அவர் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் கெட்டபெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்களில் யாராவது கூட இப்படிச் செய்திருக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சீமான்.

-விளம்பரம்-
Advertisement