அடிப்படையே தப்பு, இது கொள்கை இல்லை, கூமுட்டை- விஜய்யை விமர்சித்த சீமான்

0
125
- Advertisement -

மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசிய கருத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து சீமான் கொடுத்திருக்கும் பதிலடி வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்ட கூட்டம் சமீபத்தில் நடைபெற்று இருந்தது. இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்த சீமான் இந்த கூட்டத்தில் கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. கூட்டத்தில் சீமான் பேசியிருந்தது, தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று, எங்கள் கன்று என்று புதிய தத்துவம் சொன்னதைக் கேட்டு நான் பயந்துவிட்டேன். இப்போது காட்டுக் கோழியும், நாட்டு கோழியும் ஒன்னு என்று சொல்கிறார்கள். காரணம், சமீபத்தில் வந்த ஒரு படத்தில் வில்லன், ஹீரோ ஒருத்தரே நடித்ததால் தான் நான் இப்படி நினைத்தேன். திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு. தமிழர்களுக்கு திராவிடம் அயல்மை. தமிழ் தேசியம் பொருந்தும் பேருண்மை.

- Advertisement -

சீமான் பேட்டி:

இரண்டும் ஒன்று என கூறும் அடிப்படையே தவறான விஷயம். இது கொள்கை இல்லை. சாலையின் அந்தப் பக்கம் இருக்க வேண்டும் இல்லை என்றால் இந்த பக்கம் இருக்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து செத்து விட வேண்டியது தான். இது நடுநிலை இல்லை கொடு நிலை. இது கொள்கை இல்லை, அழுகிய கூமுட்டை. நான் குட்டி கதை சொல்பவன் இல்லை. வரலாற்றை சொல்ல வந்தவன். நீங்கள் அம்பேத்காரை, பெரியாரை எல்லாம் இப்போதுதான் படிக்கிறீர்கள். நான் படித்து பிஎச்டி முடித்துவிட்டேன்.

விஜய் குறித்து சொன்னது:

நீங்கள் இலக்கிய வரலாற்றை இப்போது தான் ஆராய்கிறீர்கள். நாங்கள் அந்த வரலாற்றை கரைத்து குடித்து இருக்கிறோம். நாம் நெடுஞ்செழியன் பாண்டியனுடைய பேரன் பேத்திகளடா. கருவிலேயே யார் என்னுடைய எதிரி என்று தீர்மானித்து பிறந்தவன். நான் ஏசி அறையில் அமர்ந்து சிந்திப்பவன் கிடையாது. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நான் சத்தமாக பேசுகிறேன் என்றால் ஆமாம், என்னிடம் சரக்கு இருக்கிறது, கருத்து இருக்கிறது.

-விளம்பரம்-

மாநாடு குறித்து சொன்னது:

அதனால் தான் நான் சத்தமாக பேசுகிறேன். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா? எங்களுடைய இலட்சியத்திற்கு எதிராக பெற்ற அப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான். தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் எங்ககிட்ட காட்ட வேண்டாம். 2026 ஆம் ஆண்டு என்னுடைய ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது என்று பயங்கரமாக பேசியிருந்தார். மாநாடு முடிந்ததிலிருந்து தான் சீமான் இப்படி கொந்தளித்து பேசி இருக்கிறார்.

விஜய் அரசியல்:

இதுவரை விஜய்யை தாக்கி பேசாத நிலையில் தற்போது சீமான் பேசி இருப்பது பலருக்குமே வியப்பையும் அதிருப்தியையுமே ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார் தலைவர் விஜய்.

Advertisement