‘நந்தன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீமான் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ என்ற படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டார்.
முதல் படத்திலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து இவர் சமுத்திரகனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்கு பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நந்தன்’. இந்த படத்தை இரா. சரவணன் இயக்கி இருக்கிறார்.
நந்தன் படம்:
இவர் இதற்கு முன்பு உடன்பிறப்பு என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் செப்டம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருக்கிறது இதில் சசிகுமார், சரவணன், சுருதி பெரியசாமி உட்பட படக்குழுவினர் பலருமே கலந்து கொண்டு இருந்தார்கள்.
விழாவில் சீமான் சொன்னது:
அப்போது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனரும், நடிகருமான சீமான், இந்த நிகழ்ச்சியை இசை வெளியீட்டு விழாவாக பார்ப்பதைவிட பல நூறு ஆண்டு காலமாக இந்த மண்ணின் உடைய மக்கள் பட்ட வலியை வெளிப்படுத்தும் விழாவாக தான் நான் பார்க்கிறேன். இந்த படத்தினுடைய ஒவ்வொரு காட்சிகளுமே கனமாகவும் கவனமாகவும் இயக்குனர் பதிவு செய்திருக்கிறார். எனக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது.
படம் குறித்து சொன்னது:
இந்த படத்தில் முதல் காட்சியில் இருந்தே என்னுடைய தம்பி சசியை மறந்து விடுவீர்கள். காரணம், அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படத்தில் புதுமுக நடிகையாக ஸ்ருதி இருந்தாலுமே தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். புதுமுக நடிகை என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். சமுத்திரகனியும், பாலாஜி சக்திவேலும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி உடைய கதாபாத்திரம் என்னை பொறாமைப்பட வைத்திருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்திருக்கக் கூடாதா? என்று நான் சரவணனை திட்டி இருந்தேன்.
சமுத்திரக்கனி குறித்து சொன்னது:
அந்த கதாபாத்திரம் என்னை தான் பிரதிபலிக்கிறது. என் கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்திருக்கிறார். படத்தினுடைய கதை நிகழ்காலத்திலும் நம்மைப் போன்ற சக மனிதர்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை கதைக்களமாக கொண்டு இயக்குனர் எடுத்திருக்கிறார். துணிந்து இயக்குனர் இந்த படத்தை எடுத்திருப்பது பாராட்டக்கூடிய ஒன்று. அனைவரும் இணைந்து ஒரு காவியத்தை படைத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அனைவருக்குமே என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.