டேய் அத மாத்துடானு சொன்னேன், மாத்திட்டான் – எச் வினோத் குறித்து சீமான் சொன்ன விஷயம்.

0
397
hvinoth
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்து இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வரும் 11ஆம் தேதி துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் மிகவும் ப்ரோமோஷனுன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் கட் அவுட் வைப்பது, பழனிக்கு காவடி எடுப்பது, கடலுக்கு அடியில் போஸ்டர் ஓட்டுவது, கோவில்களில் பூஜைகள் செய்வது என ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
varisuthunivu

அந்த வகையில் பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் உண்மையான பணம் போல துணிவு படத்தின் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு ரசிகர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வரும் 11 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு அஜித் நடித்த துனிவு படத்தின் சிறப்பு காட்சியும், காலை 4மணிக்கு விஜய் நடித்த வாரிசு படத்தின் சிறப்பு காட்சியும் வெளியாக இருக்கிறது. இதனால் தற்போது தமிழகம் முழுவது இரண்டு ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதை நம்மால் நன்றாக பார்க்க முடிகிறது.

- Advertisement -

அதோடு சோசியல் மீடியாக்களில் இவரை பற்றி அவருடைய ரசிகர்கள் கலாய்ப்பதும் அவரைப் பற்றி இவருடைய ரசிகர் கலாய்ப்பதுமாக #துணிவு #வாரிசு என சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தான் துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணையத்திலும், நேரடியாகவும் மோதுவது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில் `தமிழ் சினிமாவில் 15 முன்னணி நடிகர்கள் உள்ளனர். அவர்களுடைய ரசிகர்கள் செய்யும் அளவிற்க்கு நாங்கள் 100 கோடி ருபாய் செலவழித்தால் கூட இப்படி விளம்பரம் செய்ய முடியாது. ஆனால் இந்த ரசிகர்களுக்கு படக்குழுவும், அந்த நடிகரும், தயாரிப்பு நிறுவனமும் என்ன செய்ய முடியும்? திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் கூட அதிக அளவு கடந்த சினிமா மோகம் தற்போது உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால் அது உண்மைதான்.

-விளம்பரம்-

சினிமாவிற்க்காக இவ்வளவு நேரம் செலவிட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்றால் அதை பார்க்கலாம், மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வளவுதான் சினிமா, அதை தவிர்த்து இவ்வளவு நேரம் செலவிட வேண்டியதில்லை. நேரத்தை யாராலும் திரும்ப கொடுக்க முடியாது. உங்களுடைய நேரத்தை யாராலும் உங்களை விட பயன்படுத்தவும் முடியாது என்று பேசியிருந்தார் இதற்கு ரசிகர்கள் வெகுவாக இயக்குனர் எச் வினோத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இயக்குனர் வினோத் குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் நான் சொன்ன பிறகே H. வினோத் என்றிருந்த பெயரை எச். வினோத் என்று மாற்றி பயன்படுத்த ஆரம்பித்ததாக கூறினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement