சீறிய நாம் தமிழர் கட்சியினர். தப்பி ஓடிய வீரலட்சுமி கமிஷனர் அலுவகத்தில் என்ன நடந்தது?

0
684
- Advertisement -

விஜயலட்சுமி நடவடிக்கை குறித்து தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகை விஜயலட்சுமி குறித்து சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன.

-விளம்பரம்-

பின் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று போலீசில் விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜயலட்சுமி அளித்த புகார்:

ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். பின் சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருக்கிறது. மேலும், இது குறித்து சில நாட்களுக்கு முன்பு ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி இடம் துணை கமிஷனர் உரிமையாளர் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தார்.

நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி துணையாக இருக்கிறார். இவர் விஜயலட்சுமிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்திருக்கிறார். வீரலட்சுமி சீமான் மீதும் சாட்டை துறைமுருகன் மீதும் புகார் அளிக்க சென்று இருந்த நிலையில் அங்கு திரண்ட நாம் தமிழர் கட்சியினர் வீர லட்சுமியை ஆபாசமாக பேசியும் அவரை மிரட்டி வந்தனர்.

-விளம்பரம்-

ஆபாசமாக பேசிய தம்பிகள்:

தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி எதிராக நாம் தமிழர் கட்சியின சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வீரலட்சுமி ஆபாசமாக பேசி வந்தனர். சென்னையில் பேரூரில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில். நேற்று மதியம் 12 மணியளவில்  தமிழர் முன்னேற்ற படை தலைவர்  வீரலட்சுமி  சீமான் மற்றும் சாட்டையும் துரைமுருகன் மீது  புகார் அளிக்க வந்திருந்தார். அங்குத் திரண்ட நாம் தமிழர் கட்சியினர் வீரலட்சுமி காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளனர். அப்புறம் அங்க ஒரு பாதுகாப்பு பணியில் இருந்து காவலர்கள் சீமான் கட்சியினரை அனைவரையும் உள்ளே செல்ல அனுமதி மறுத்து நிறுத்தி வைத்தனர்.

இதனால் கோபம் மட்டும் நாம் தமிழர் கட்சி நேரங்கள் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் போலீசார் கதவுகளை பூட்டி அவர்களை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேறியது. அங்கு வந்த வீரலட்சுமி கண்டதும் கோபம் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வீரலட்சுமி ஆபாசமாக திட்டினார்கள். அதன் பின் போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக முறையில் வீரலட்சுமி அழைத்துச் சென்றனர். சீமான் மீது நடிகையும் வீரலட்சுமி பணம் பிடிக்கும் நோக்கத்துடன் தொடர்பு கொண்டு அவர் மீது புகார் அளித்து வருவதாகவும் அவர் கட்சியை சேர்ந்த சென்னை மத்திய மாவட்ட செயலாளர் அய்யனார் கூறியிருக்கிறார்.

Advertisement