ரஜினியும், கமலையும் அடிக்கற அடியில விஜய் உட்பட எந்த நடிகருக்கும் அந்த எண்ணம் வரக்கூடாது – சீமானின் ஆவேச வீடியோ.

0
921
seeman
- Advertisement -

தமிழக அரசியலை பொறுத்த வரை பல்வேறு நடிகர் நடிகைகள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளனர். அதில் எம் ஜி ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பல சினிமா பிரபலங்கள் தமிழகத்தை ஆண்டும் உள்ளார்கள். இவர்களை தொடர்ந்து விஜயகாந்த், சரத்குமார், சீமான், குஷ்பூ, ரோஜா என்று பல்வேறு நடிகர் நடிகைகள் அரசியலில் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கின்றனர். அதிலும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் ரஜினி, கமல் கூட அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் களம்காண இருக்கின்றனர். இதில் கமல் ஏற்கனவே, பிரச்சாரத்தை எல்லாம் துவங்கிவிட்ட நிலையில் ரஜினி இன்னும் தனது திட்டத்தை தெளிவாக சொல்லாமல் தான் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

தமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது.சமீபத்தில் தேர்தலுக்கான கட்சி சின்னங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டவில்லை. ஆனால், புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான நடிகர் கமலஹாசன் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த சில தினங்களாக தொடர்ந்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் கூட மக்களுக்காக எந்த ஒரு ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் ரஜினியும் சேர தயாராக இருக்கிறேன். இருவரும் இணைந்து மக்களுக்கான கலப்பணியை செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறி இருந்தார் கமல். இப்படி ஒரு நிலையில் ரஜினி, கமல், விஜய் போன்றவர்களின் அரசியல் வருகை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சீமான், எங்களை வழி நடத்துவதற்கு எங்களுக்குள் ஒருவர் இல்லையா? இதற்கு மகாராஷ்டிராவில் இருந்து ஒருவர் வரவேண்டுமா? மானம், வீரம், அறம் ஆகிய மூன்றும் உயிர் என்று வாழ்ந்த தமிழினத்துக்கு இது ஒரு தன்மான இழப்பு. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை விட்டுவிட்டு ரஜினிகாந்தை மட்டும் பிடிக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.

அவர்களையெல்லாம் விட்டு விட்டதால்தான் இப்போது இவர்களை பிடிக்க வேண்டியதாக இருக்கிறது.பிரபாகரனை பற்றி, ரஜினியும், கமல்ஹாசனும் மதிப்பீடு சொல்லிவிடுங்கள் பார்ப்போம். என்னுடைய தாய்மொழி தமிழ், உங்களுடைய தாய் மொழி என்ன என்று முதலில் சொல்லுங்கள். அவ்வளவு மானங்கெட்ட கூட்டமா நாங்கள்?ரஜினிகாந்த், கமல்ஹாசனை அடிக்கிற அடியில் வேறு எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது என்றார். இது விஜய்க்கும் பொருந்துமா என்ற நிருபரின் கேள்விக்கு, எல்லோருக்கும் பொருந்தும். நானும் திரையுலகத்தில் இருந்து வந்துள்ளேன். ஆனால் நான் ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வரவில்லை. சாவுகூட்டத்தில் வெடித்துக் கிளம்பி மக்களை சந்தித்து நான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார் சீமான்.

-விளம்பரம்-
Advertisement