‘நான் உனக்கு அந்த பல்லவிய போட்ருக்க கூடாது யா’னு சொன்னார் – இளையராஜாவால் 2 ஆண்டு படம் எடுக்காமல் போன சீனு ராமசாமி.

0
241
seenu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தன்னுடைய கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி. ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகராக மிரட்டி கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

மேலும், சமீப காலமாக விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் வெளியாகி வருகிறது. அதிலும் ஒரு வாரத்திற்கு மூன்று , நான்கு படங்கள் கூட ரிலீசானது. இப்படி தொடர்ந்து விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் ஆகி இருந்ததால் சோசியல் மீடியாவில் கிண்டல் கேலிகள் எழுந்து இருந்தது. கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் கடைசி விவசாயி. சமீபத்தில் தான் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிகண்டன் இயக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க விவசாயம் பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மாமனிதன் படம்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் தற்போது பல படங்களில் கமிட்டாகி மும்முரமாக நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாமனிதன். இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியிருக்கிறார். இவர் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி வைத்து இயக்கி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். மேலும், முதல் முறையாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளார்கள்.

இசை வெளியீட்டு விழா :

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் மே 20ஆம் தேதி திரைகளில் வெளியாக உள்ளது. அதோடு இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, சீனு ராமசாமி உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சீனு ராமசாமி கூறியிருப்பது, 18 வருடத்திற்கு முன்பு நானும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு உருவானது.

-விளம்பரம்-

இளையராஜா குறித்து சீனு ராமசாமி கூறியது:

ஒரு நாள் அதிகாலையில் ரமணமகரிஷி புகைப்படத்திற்கு முன்னாடி கம்போஸிங்க்கு உட்கார்ந்திருந்தோம். நான் கதை சொல்லி முடித்தவுடன் ஆர்மோனியத்தை கையில் வைத்து இளையராஜா பாட ஆரம்பித்தார். ‘அகதியாய் நிற்கதியாய் பிறந்த மண்ணிலே..’ என்று பாடினார். பின் இரண்டரை வருடம் படமே இல்லாமல் போச்சு. மறுபடியும் இரண்டரை வருடம் கழித்து அவரை போய் பார்த்தேன். என்னை பார்த்த உடனே, நான் உனக்கு அந்த பல்லவியை போட்டிருக்க கூடாது யா என்று சொன்னார். தற்போது இந்த படத்தில் பாடல் வரிகள் எல்லாம் எப்படி இருக்கும் என்பதில் ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.

மாமனிதன் படத்தில் இளையராஜா:

ஏன்னா, இந்த படத்திற்கு பாடல் வாங்குவதற்கு எனக்கு போதிய நேரமில்லை. அதனால் படத்தை முழுமையாக எடுத்துவிட்டேன். பின் படத்தை பார்த்துவிட்டு இளையராஜா முழு படத்திற்கு மியூசிக் போட்டார். அவரது பாடல்கள் எழுதப்படுவதற்கு முன்பாகவே படமாக்கப்பட்டு விட்டது. பின் பா.விஜயின் வரிகள் என்னிடம் வந்தது. வாங்கிப் படித்தேன். அதில் ‘நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று’ என்று இருந்தது. பிறகு மூன்றே நாளில் கொரோனா வந்துவிட்டது. கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் எல்லோருக்கும் பயம் இருந்தது.

மாமனிதன் பாடல் குறித்த தகவல்:

மாமனிதன் படம் மறந்தே போயிருச்சு. அப்படியே 2 வருடம் கடந்துவிட்டது. பிறகு நான் கவிஞருக்கு போன் போட்டு எழுதறது எழுதிறீங்க, ‘நினைத்தது கிடைச்சிது , இருக்கிறத வச்சி சந்தோசமா இரு’ இப்படி பாசிட்டிவாக ஏதாவது எழுத வேண்டியது தானே. ‘நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு ஏ ராசா..’ உலகத்தில் இந்த 2 வார்த்தையை சந்திக்காத மனிதனே கிடையாது. இந்த பாட்டுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று அவரிடம் கூறினேன் என்று பல விஷயங்களை பகிர்ந்தார்.

Advertisement