இப்படி பண்ணா பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான் – சென்னை மாநகராட்சியை விமர்சித்த இயக்குநர் சீனு ராமசாமி

0
345
seenu
- Advertisement -

சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான இடங்கள் தோண்டப்பட்டிருப்பதை குறித்து இயக்குனர் சீது ராமசாமி விமர்சித்து பதிவிட்டிருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில மாதங்களாகவே சென்னை மாநகராட்சியில் பருவமழை காரணமாக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, நெடுஞ்சாலை துறை சார்பில் மழை நீர் வடிகால் பணிகள், மின்சார துறை சார்பில் கேபிள் அமைக்கும் பணிகள், குடிநீர் வாரியம் சார்பில் கழிவுநீர் வடிகால் பணிகள் போன்ற பல்வேறு துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இதற்காக சென்னையில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். நடைபாதை இடங்கள் மற்றும் போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி விமர்சித்து டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், நகரத்தை சரி செய்து நெறிப்படுத்த வேண்டும். அது ஒரு சிகை தொழிலாளி முடித்திருத்தம் செய்வது போல ஒரு ஓரத்தில் இருந்து பரவி வர வேண்டும்.

- Advertisement -

சீனு ராமசாமி டீவ்ட்:

ஓட்டு மொத்த நகரத்தையே தோண்டி போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவார் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி சீனு ராமசாமியின் பதிவிற்கு பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்த கொண்டிருப்பவர் சீனு ராமசாமி. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் கூடல்நகர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் தமிழ் உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

சீனு ராமசாமி திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு 3 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இடம் பொருள் ஏவல். இந்த படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

-விளம்பரம்-

மாமனிதன் படம்:

சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி,ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இந்த படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் வெளியிடுகிறார். மேலும், இந்த ஆர்கே இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைத்திருக்கின்றனர்.

இடி முழக்கம் படம்:

இது விஜய் சேதுபதி- சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இடி முழக்கம். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், காயத்ரி உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படமும் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது.

Advertisement