இனி விஜய் சேதுபதி போல நீங்களும் இனவெறியன்’ – சீனு ராமசாமி போட்ட டீவீட்டுக்கு ரசிகர் போட்ட கமன்ட். ஆதரவாக வந்த சேரன்

0
707
seenuramasamy
- Advertisement -

நான் இனவெறியன் , யாரையும் வெறுப்பவன் அல்ல என்று கொந்தளித்து போய் சீனு ராமசாமி போட்ட டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் சீனு ராமசாமி. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கூடல் நகர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மனிதன் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தேசிய விருது பெற்ற இயக்குனர் :

மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் 3 தேசிய விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பாக கலைமகன் முபாரக் தயாரித்து இருக்கிறார்.

- Advertisement -

தமிழ் நாட்டில் பிற மொழி படங்கள் :

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், காயத்ரி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அதோடு ஆக்சன் திரில்லர் வகையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் தியேட்டரில் மற்ற மொழி படங்களுக்கு கிடைக்கும் முன்னுரிமை தமிழ் மொழி படங்களுக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சீனு ராமசாமி டீவ்ட் போட்டுள்ளார்.

தமிழ் படங்களுக்கு முன்னுரிமை :

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழில் ராக்கி, ஆனந்தம் விளையாடும் வீடு, ரைட்டர், புஷ்பா, 83, ஷியாம் சிங்கா ராய் போன்ற பல படங்கள் வெளியாகி இருந்தது. இதில் பாதிக்கு மேல் டப்பிங், ஆங்கில படங்கள் தான் வெளியாகி இருந்தது. இதனால் தமிழ் திரைப் படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ட்விட்டரில் சீனு ராமசாமி கூறியிருப்பது, கேரளா, கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் படங்கள் வெளியாகும்போது அவர்களுக்கு முன்னுரிமை தருவது போல தமிழ்நாட்டு படங்கள் வெளியாகும்போது தமிழ்நாட்டு படங்களுக்கு முதல் முக்கியத்துவம் தரவேண்டும்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி போல் நீங்களும் இன வெறியன் :

மாற்று மொழி டப்பிங் மற்றும் ஆங்கில படங்கள் தனியாக திரையிட கால அட்டவணையை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உருவாக வேண்டும். அதேபோல் ஒரே நேரத்தில் மூன்று டப்பிங் மற்றும் ஆங்கில படங்கள் அதிக விளம்பரத்தோடு வந்தால் இங்கே இருக்கிற ரைடர் படம் எப்படி தன்னோட வீட்டில் ஆனந்தமாக விளையாட முடியும்? சிலந்தி கூடு கட்டிராதா? என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த விமர்சகர் ஒருவர் இன்று முதல் உங்கள் நண்பர் விஜய் சேதுபதி போல் நீங்களும் இன வெறியன் என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள் என்று டீவ்ட் போட்டு இருந்தார்.

சேரன் ஆதரவு :

இதற்கு உடனே சீனு ராமசாமி அவர்கள் கூறியது, எல்லாத்தையும் ஒரே நேரத்தில் விடாமல் ஒவ்வொன்றாக கூட விடுங்கள். இது பற்றி யோசிக்கலாம். அவ்வளவு தான் என்னுடைய கேள்வி. இதுஇனவெறி அல்ல. நான் யாரையும் வெறுப்பவன் அல்ல என்று பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சீனு ராமசாமியின் டீவ்ட் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. இதை பார்த்த இயக்குனர் சேரன் அவர்கள் அவருக்கு ஆதரவாக டீவ்ட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, தமிழர்கள் முன்னுரிமை பேசப்பட வேண்டும். அதை நம் அரசாங்கம் முன்னின்று செயல்பாட்டை உறுதிப்படுத்த வலியுறுத்த வேண்டும். தமிழ் படங்களுக்கு சிறு முதலீட்டு படங்களுக்கு காட்சிகள் பாகுபாடு முறைப்படுத்த முன்வர வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு சீனு ராமசாமி அவர்கள் கூறியிருப்பது,

தமிழ் திரைப்பட நலன் என்பது இங்கு இருக்கிற தொழிலாளர்கள் நலன் தான். இது என்ன ஓட்டப்பந்தயமா? ஓடி ஜெயிக்கிறதுக்கு. சின்ன பட்ஜெட் படங்கள் நம்மூர் தியேட்டர் தான் கதி என்று இருக்கிறது. அதுவும் 3 நாள்கள் கலெக்ஷன் தான். எல்லா படங்களும் வரட்டும் இரண்டையும் தனியாக பிரித்து விடலாமே? புதுமுகங்கள் பாவம். அவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கனும் என்றும் பதிவிட்டிருக்கிறார். இப்படி தமிழ் நடிகர்களின் படங்களை குறித்து சீனு ராமசாமி பதிவிட்ட டீவ்ட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement