இயக்குனர் சீனு ராமசாமி செய்த டார்ச்சலால் பிரபல நடிகை சினிமாவை விட்டு விலகி விட்டார் என்று பத்திரிகையாளர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் சீனு ராமசாமி. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கூடல் நகர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
https://twitter.com/tamiltalkies/status/1727367486163861769
அந்த படத்தை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் 3 தேசிய விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனு ராமசாமி திரைப்பயணம்:
தற்போது இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பாக கலைமகன் முபாரக் தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் ஜி வி பிரகாஷ், காயத்ரி, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் என பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதோடு ஆக்சன் திரில்லர் வகையில் இந்த படம் உருவாகியிருக்கிறது.
https://twitter.com/seenuramasamy/status/1727306284897378419
பிரபல பத்திரிகையாளர் பேட்டி:
இந்த நிலையில் சீனு ராமசாமி குறித்து பிரபல பத்திரிகையாளர் விமர்சித்து அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், இயக்குனர் சீனு ராமசாமி செய்த டார்ச்சரால் தான் நடிகை மனிஷா யாதவ் சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார். இவர் தமிழில் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், அதற்கு பின்பு சீனுராமிசாமி இயக்கும் படத்தில் கொடுத்த டார்ச்சனால் மனிஷா யாதவ் விலகி விட்டார்.
மனிஷா யாதவ் நடந்த கொடுமை:
பல வருடங்களாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாமல் இருக்கும் படம் இடம் பொருள் ஏவல். இந்த படத்தில் மனிஷா முக்கிய கதாபாத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பின் போது மனிஷாக்கு சீனு ராமசாமி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்திருக்கிறார். சொல்லவே முடியாத அளவிற்கு கொடுத்திருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடமும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனுராமசாமி விளக்கம் :
இப்படி ஒரு நிலையில் பிஸ்மியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சீனு ராமசாமி 'வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார் ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க... இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும் என்று பதிவிட்டு ஒரு குப்பை கதை பட ஆடியோ விழா வீடியோ ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார்.
மனிஷா யாதவ் திரைப்பயணம்:
இயக்குனார் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘வழக்கு என் 18/9' படம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இதன் பின்னர் பல தமிழ் படங்களில் நடித்து இருந்தார். பின் இவர் ஒரே ஒரு தெலுங்கு படத்தில் நடித்து இருக்கிறார். பின்னர் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்த அம்மணி ஒரு குப்பை கதை மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதற்கு பின் இவரின் படங்கள் பெரிதாக வெளியாக வில்லை.






