உன் ஆவேசம் தாயின் அடிவயிற்றுக் குரல் – பிரியங்கா காந்திக்கு ஆதரவாக பதிவிட்ட சீனு ராமசாமி.

0
333
Seenuramasamy
- Advertisement -

ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்திக்கு ஆதரவாக இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியா பிரதமர் மோடியை குறித்து 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியிருந்தார் என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து ராகுல் காந்தியை வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்திருந்தது. மேலும், எதிர்க்கட்சிகள் இதை ஜனநாயக படுகொலை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டமும் நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து ராகுல் காந்தி, நான் தகுதி நீக்கத்திற்காக அஞ்சப் போவதில்லை

- Advertisement -

பிரியங்கா காந்தி பதிவு:

பிரதமர் மோடியின் கண்ணில் பயம் தெரிகிறது என்றெல்லாம் குற்றம் சாட்டியிருந்தார். இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி, எங்கள் குடும்பத்தை வாரிசு அரசியல் என்று சொல்லும் நரேந்திர மோடி அவர்களே, இந்த நாட்டின் ஜனநாயகம் எங்கள் குடும்பத்தின் ரத்தத்தால் எழுதப்பட்டது. எங்கள் நரம்புகளில் ஓடும் இந்த ரத்தத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.

சீனு ராமசாமியின் டீவ்ட்

உங்களைப் போன்ற கோழைகளின் முன் அடிப்படையாது என்று கூறியிருந்தார். இதனை அடுத்து அரசியல்வாதிகளும், பிரபலங்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர்,

-விளம்பரம்-

தங்கை பிரியங்கா காந்தி
பிரியங்கள் யாவும்
உனக்கு தந்தேன்
பூங்கொத்தாக..

எப்போதும்
அமைதி
பொய்மையை கண்டு பிடிக்க உதவாத தெரு நாய்.

புனர்ஜென்ம மோப்பசக்தி அதற்கில்லை.

உன் ஆவேசம் தாயின் அடிவயிற்றுக் குரல்.

வாழ்த்துகள் சகோதரி என்று கூறி இருக்கிறார். தற்போது இயக்குனர் சீனு ராமசாமியின் டீவ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

சீனு ராமசாமி குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் சீனு ராமசாமி. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கூடல் நகர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மனிதன் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது.

Advertisement