அப்செட்டான விஜய் சேதுபதி..!சீதக்காதி படத்தின் 20 நிமிட காட்சிகள் நீக்கம்..!

0
533
Vijaysethupathi

தமிழ் சினிமாவில் அணைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹிட் என்றே கூறலாம். ஆனால், சமீபத்தில் வெளியான சீதக்காதி படம் விதிவிலக்காக அமைந்துள்ளது.

கடந்த 21 தேதி வெளியான கனா, அடங்கமறு,மாரி 2 போன்ற படங்களுக்கு போட்டியாக விஜய் சேதுபதியின் சீதக்காதி படமும் வெளியானது. விஜய் சேதுபதியின் 25வது படமான இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

இதையும் படியுங்க : கனா,அடங்கமறு,சீதக்காதி,மாரி 2..!வெற்றிபெற்ற படம் எது..!இதோ விவரம்.

- Advertisement -

போதாதா குறைக்கு இந்த படத்தில் விஜய் சேதுபதி 40 நிமிடங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கெட்டப்பை பார்த்து அசந்து பூனா ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு நொந்து போயினர். மேலும் படமும் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடி ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்து விட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் தேவையில்லாத சில காட்சிகளை நீக்குங்கள் என்றுஇயக்குனரிடம் கூறியுள்ளார் விஜய் சேதுபதி. இதனால் படத்தில் இருந்து 30 நிமிட காட்சிகளை நீக்க முடிவெடுத்துள்ளாரகலாம் அதில் விஜய் சேதுபதியின் ஒரு காட்சியும் அடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement