கனா,அடங்கமறு,சீதக்காதி,மாரி 2..!வெற்றிபெற்ற படம் எது..!இதோ விவரம்..!

0
975

இந்த மாதம் மட்டும் தமிழ் சினிமாவில் எண்ணெற்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளன அதில் முக்கிய நடிகர்களின் படங்களை எடுத்துக்கொண்டால் சீதக்காதி, கனா, அங்கமறு,மாரி 2 போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.

இத்தனை படங்கள் வெளியாக நிலையில் எந்த படத்திற்கு செல்லலாம் என்று பலரும் குழம்பியுள்ளனர். அந்த வகையில் ரசிகர்களின் கருத்துக்கணிப்பு,விமர்சகர்களின் விமர்சனம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது ஜெயம் ரவி நடித்த அடங்கமறு படம் தான் முதல் சாய்ஸ்.

அடங்கமறு விமர்சனம் இங்கே : மீண்டும் ஒரு தனி ஒருவனா..!அடங்கமறு படத்தின் முழு விமர்சனம் இதோ..!

- Advertisement -

அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள கனா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெண்கள் கிரிக்கடடை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. விமர்சனம் இதோ.

மூன்றாவது இடத்தில் விஜய் சேதுபதியின் சீதக்காதி இடம்பிடித்துள்ளது. விஜய் சேதுபதி இதில் ஒரு சிறப்பு தோற்றம் மட்டுமே செய்துள்ளார் என்று தான் கூற வேண்டும் இருப்பினும் மேடை கலைஞ்சர்களை பற்றிய அழுத்தமான கதை கொஞ்சம் மெதுவான திரைக்கதையுடன் நகர்கிறது விமர்சனம் இதோ

-விளம்பரம்-

கடைசி இடத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள மாரி 2 படம் இடம்பிடித்துள்ளது. மாரி படத்தின் முதல் பாகத்தை கொஞ்சம் தூசி தட்டி கொடுத்துள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன். இருப்பினும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை. விமர்சனம் இதோ

Read more at: https://tamil.behindtalkies.com/adangamaru-movie-review/

Advertisement