சீதக்காதி படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல நடிகரின் அண்ணன்..!

0
643
Seethakkathi
- Advertisement -

இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘சீதக்காதி’ இந்த படத்தின் பஸ்ட் லுக் விஜய் சேதுபதியின் பிறந்தநாளான்று வெளியிடபட்டது.அதன் பின்னர் இந்த படத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்களும் வெளியான வண்ணம் இருக்கிறது.

-விளம்பரம்-

Sunil

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பல்வேறு வேடங்கள் இருப்பதால் ஹாலிவுட் மேக்கப் மேன்களை கொண்டு மேக்கப் போடப்பட்டது. இந்த முயற்சியை ரசிகர்கள் பாராட்டினர்.இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் ,பார்வதி மற்றும் காயத்ரி நடிக்கவுள்ளனர்.

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அர்ச்சனா என்பவர் தான் நடிப்பதாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். நடிகை அர்ச்சனா’ வீடு ‘ படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில் நடித்துள்ளார். வழக்கமான வில்லனாக இல்லாமல் நகைச்சுவை கலந்த வில்லனாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இந்தக் கேரக்டரில் நடிக்க தயாரிப்பாளர் சி.வி.குமாரிடமும் பாடகர் மனோவிடமும் அணுகியுள்ளார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். ஆனால், அது கைகூடாமல் போக, இவரை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு பிறந்தநாள் விழாவில் சுனிலை பார்த்த பாலாஜி தரணிதரன், அவரிடம் நடிக்க கேட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் தயங்க, பின்பு ஒப்புக்கொண்டாராம். இதற்காக சில வாரங்கள் அவருக்கு நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு பின் படத்தில் நடித்துள்ளாராம்.

Advertisement