யார் இந்த உண்மையான சீவலப்பேரி பாண்டி ? – உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா ? இதோ வீடியோ.

0
8279
seevila
- Advertisement -

இயக்குனர் பிரதாப் கே. போத்தன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சீவலப்பேரி பாண்டி. இந்த படத்தில் நெப்போலியன், சரண்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் சீவலப்பேரி பாண்டி கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். உண்மையாலுமே வாழ்ந்த சீவலப்பேரி பாண்டியன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. சீவலப்பேரி பாண்டி மனிதனை வெளியுலகத்திற்கு தெரிய வைத்தது சீவலப்பேரி பாண்டி படமாக இருந்தாலும் அதில் அவரைப் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தார்கள். இந்நிலையில் சீவலப்பேரி பாண்டி யார்? அவர் எப்படிக் கொல்லப்பட்டார்? என்பதைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

எண்பதுகளின் காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டை கலக்கிக் கொண்டிருந்தவர் சீவலப்பேரி பாண்டி. திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் பாண்டி தேவர். இவருடைய பெயர் தான் சீவலப்பேரி பாண்டி. இவருடைய அண்ணன் பெயர் மலையாண்டி. அந்த ஊரில் பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் அண்ணன்- தம்பி இருவரும். இந்த பகுதிகளில் மாட்டு வண்டி வைத்துக்கொண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளி விற்பனை செய்யும் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அதோடு அந்த ஊருடைய சந்தை என்பது இவர்களுடைய சொந்த நிலத்தில் நடக்கும். பெரிய ஆட்டுசந்தை என்பதால் அதற்கான வாடகை எல்லாம் இவர்களுக்கு கிடைத்து இருக்கு.

- Advertisement -

செழிப்புடன் வாழ்ந்த பாண்டி :

ஒரு மிகப் பெரிய செல்வச் செழிப்போடு தான் அந்த காலத்தில் இவர்கள் வாழ்ந்திருந்தார்கள். அந்த ஊரின் ஊர் தலைவராக இருந்தவர் சுப்பிரமணியபிள்ளை. அவரோட ஆட்களுக்கும் சீவலப்பேரி பாண்டியின் அண்ணன் மலையாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருந்தது. பின் தகராறு முற்றி மலையாண்டி அந்த தலைவரின் அடியாட்களை ஓட ஓட அடித்து துரத்துகிறார். இதைக்கேட்டு சுப்பிரமணியபிள்ளை மிரண்டுபோய் பலம் வாய்ந்த மலையாண்டியை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். மேலும், தன்னோட மெய்ப்பாதுகாவலராக அவரை வைத்துக் கொள்கிறார். ஒரு நாள் சந்தையில் வழக்கம்போல் ஆட்டு வியாபாரம் நடக்கிறது. அந்த காலத்தில் விற்பனை செய்யும் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்து கனமாக காண்பிப்பார்கள்.

மலையாண்டியை தீர்த்துக்கட்ட முடிவு

இது பிடிக்காத மலையாண்டி நியாயமாக இருக்க வேண்டும் இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று அவர்களை அடித்துத் துரத்தினார். இதனால் மலையாண்டி மீது கோபப்பட்டு தலைவரிடம் ஒன்றுக்கு இரண்டாய் பொய் கூறுகிறார்கள். இப்படியே சென்றால் மலையாண்டி புகழ்தான் ஊர் எங்கும் ஒலிக்கும். உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த தலைவர் மலையாண்டியை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். மேலும், ஊர் திருவிழாவிற்கு மலையாண்டி குடும்பத்தினர் கலந்து கொள்ள கிளம்பி கொண்டிருக்கிறார்கள். அப்போது தலைவரின் மனைவிக்கு உடம்பு சரி இல்லை அவர்களுக்கு இளநீர் வெட்டிக் கொடுக்க வேண்டும் என்று மலையாண்டியை அழைக்கிறார்கள்.
அதனால் நம்பி மலையாண்டியும் செல்கிறார்.

-விளம்பரம்-

தலைவரின் ஆட்களாக இருந்த காவல்துறையினர் மலையாண்டியை சுட்டு கொலை செய்கிறார்கள். மலையாண்டி இறந்து விடுகிறார். இந்த விஷயம் தெரிந்த சீவலப்பேரி பாண்டி ஓடிப்போய் தன்னுடைய அண்ணன் உடலை தூக்கிப் பார்க்கிறார். அப்போது காவல் துறையை தான் ஏதோ ஒரு பிரச்சினையில் தன் அண்ணனைக் கொன்று இருக்கிறார்கள் என்று நினைக்கிறார். பின் அண்ணன் செய்த மெய்பாதுகாவலர் வேலைக்கு சீவலபேரிபாண்டி சேருகிறார். காலப்போக்கில் தன்னுடைய அண்ணனை கொன்றது தலைவர் தான் என்பது சீவலப்பேரி பாண்டிக்கு தெரிகிறது. பின் அண்ணனை கொன்ற தலைவரை பழிக்குப்பழி கொள்ள வேண்டும் என்று சீவலபெரி பண்டி திட்டம் போடுகிறார். இதற்கு அவருடைய நண்பர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். ஒரு நாள் தலைவர் வெளியூர் போகும்போது தலைவரை முதல் வெட்டு தலையிலேயே சீவலப்பேரி பாண்டி போடுகிறார்.

ஏழைகளுக்கு செய்த உதவி :

பின் அவரின் நண்பர்கள் தலைவரை சராமரியாக வெட்டி இருக்கிறார்கள். அதன் பிறகு காவல்துறை சீவலப்பேரி பாண்டி தேட ஆரம்பிக்கிறது. இதனால் சீவலப்பேரி பாண்டி தன் நண்பர்களுடன் தலைமறைவாகினார். பின் தலைவரின் வீட்டில் இருந்த எல்லா சொத்துக்களையும் கொள்ளையடித்து சீவலப்பேரி பாண்டி அந்த ஊரில் இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கிறார். அதன்பிறகு தொடர்ச்சியாக இருப்பவனிடம் இருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தார் சீவலப்பேரி பாண்டி. அப்படியே தன்னுடைய தலைமறைவு வாழ்க்கையை வாழத் தொடங்கினார் சீவலப்பேரி பாண்டி. ஒரு காலகட்டத்தில் சீவலப்பேரி பாண்டியன் நண்பர்கள் எல்லாம் போலீசில் சரணம் அடைந்து விடுகிறார்கள். இதனால் சீவலப்பேரி பாண்டி கொடைக்கானல் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருக்கிறார்.

சீவலப்பேரி சுட்டுக்கொலை :

அங்கேயும் அவர் கடுமையாக உழைத்து நிறைய பணம் சேர்த்து வைக்கிறார். பின் அந்த பணத்தை அந்த பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு கொடுத்திருக்கிறார். அவருடைய மனைவிக்கு கூட பணம் அனுப்பவில்லை. பின் ஒரு நாள் சுடலை மாரியம்மன் திருவிழா வந்தது. எப்படியும் இந்த திருவிழாவிற்கு வெளியூர் சென்றவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும். அதனால் சீவலப்பேரி பாண்டியன் வருவார் என்று காவல்துறையினர் காத்துக் கொண்டிருந்தார்கள். சீவலப்பேரி பாண்டி திருவிழாவிற்கு வந்தார். அவரை போலீஸார் சுற்றி வளைக்கிறார்கள். அப்போது சீவலப்பேரி பாண்டி எத்தனை துப்பாக்கி வந்தாலும் நான் ஓடமாட்டேன். உங்களுக்கு தில் இருந்தால் நெஞ்சிலே சுடுங்கள் என்று தைரியமாக நிற்கிறார். பின் அவரை போலீசார் சராமரியாக சுடுகிறார்கள்.

ஊர் மக்கள் வைத்திருக்கும் மரியாதை :

இந்த சம்பவம் 1984 ஏப்ரலில் நடந்தது. தான் உழைத்த பணம், கொள்ளையடித்த பணம் என எல்லா பணத்தையும் ஏழை மக்களுக்காக கொடுத்தவர். இதனால் சீவலப்பேரி பாண்டியன் மக்களுக்கு பிடித்த நபராக இருந்தார். இன்னைய வரைக்கும் அந்த ஊரில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பாண்டி என்ற இவருடைய பெயர் தான் வைக்கிறார்கள். இவர் பிழைக்க போன கொடைக்கானலில் இருந்து கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகள் கூட பாண்டி என்ற பெயரை வைக்கிறார்கள். இவருடைய சந்தையில் பிறந்த குழந்தை மண்ணில் போட்டு தான் தூக்கி செல்வார்கள். அவருடைய வீரம் அந்த குழந்தைக்கு வரணும் என்பது தான். ஆனால், இவர்களை சினிமா தவறாக காண்பித்து விடுகிறார்கள், இது வருந்தத்தக்க ஒன்று. மேலும், தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட முதல் என்கவுண்டர் சீவலப்பேரி பாண்டி தான்.

Advertisement