தமிழ் திரையுலகத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்லாக சில இயக்குநர்களுக்கு மட்டும்தான் அமையும். அப்படி கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின் முக்கியமான இயக்குநரான செல்வராகவனும் இணைந்திருக்கிறார்.
செல்வராகவன் இயக்கிய பல படங்கள் கிடப்பில் போடப்பட்டது. தற்போது என் ஜி கே படம் கூட நீண்ட வருடத்திற்கு பின்னர் வெளியாக இருக்கிறது. அந்த வரிசையில் எஸ் ஜி சூர்யாவை வைத்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படமும் இன்னும் கிடப்பில் தான் இருக்கிறது.
இந்தப் படத்தின் பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கியது . மேலும், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்த படம் வெளியாகாமல் போனது. அதன் பின்னர் தற்போது வரை இந்த படம் வெளியாகாமல் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய செல்வராகவன், நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ என்ற பாடலைக் கேட்டுவிட்டு என் மனைவி கீதாஞ்சலி, பச்சையாக சொல்லவேண்டும் என்றால் செருப்பால் அடித்தார். குடும்பத்திலிருந்த அனைவரும் பாட்டைக் கேட்டுவிட்டு என் மீது கோபப்பட்டனர். ஆனால், அந்த படத்திற்கு அந்த பாடல் மிகவும் அவசியமாக இருந்தது அதனால் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தும் அந்தப்பாடலை நீக்கவில்லை என்று கூறியுள்ளார் செல்வராகவன்.