இரண்டாம் மனைவிக்கு பிறந்த தன் மூன்று பிள்ளைகளுடன் செல்வராகவன் – மகன் என்ன இப்படி வளந்துட்டார்.

0
700
Selva
- Advertisement -

தமிழ் திரையுலகத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்லாக சில இயக்குநர்களுக்கு மட்டும்தான் அமையும். அப்படி  கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின்  முக்கியமான இயக்குநரான செல்வராகவனும் இணைந்திருக்கிறார். தமிழில் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் இன்று வரை பேசப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவரது இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இயக்குனர் செல்வராகவனுக்கு, நடிகை சோனியா அகர்வாலுக்கு திருமணம் ஆகி பின்னர் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.நடிகை சோனியா அகர்வாலை செல்வராகவன் தான் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அதன் புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி என்று அடுத்தடுத்து சோனியா அகர்வாலை நடிப்பிக்க வைத்த செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010வரை மட்டுமே நீடித்தது.

- Advertisement -

செல்வாவின் குடும்ப வாழ்க்கை :

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.சோனியா அகர்வாலுக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தான் இவரை செல்வராகவன் பிரிந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்னர் செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின்னர் செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதியருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு லீலாவதி என்ற மகள் பிறந்தார் அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு ஓம்கர் என்ற மகனும் பிறந்தார்.

செல்வராகவன் குடும்பம் :

இப்படி ஒரு நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மூன்றாம் குழந்தைக்கு ரிஷிகேஷ் என்று புணித தளத்தின் பெயர் வைத்துள்ளனர். அண்மையில் செல்வராகவன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

செல்வராகவனின் பகாசூரன் :

படங்களை இயக்கி வந்த செல்வராகவன் சாணிக்காகிதம் படத்தின் மூலம் நடிகரககவும் களமிறங்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்திலும் நடித்து இருந்தார். தற்போது திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் இயக்கத்தில் ‘பகாசூரன்’ படத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார்.

Advertisement