முன்னாள் மனைவி சோனியா அகர்வாலை டேக் செய்த செல்வராகவன். என்ன காரணம் ?

0
1401
- Advertisement -

சோனியா அகர்வாலை டேக் செய்து செல்வராகவன் வெளியிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார்.

-விளம்பரம்-

இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி,, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும், இவர் படங்கள் இயக்குவதும் மட்டும் இல்லாமல் நடித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட். இந்த படத்தில் செல்வராகவன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு இருந்தது.

- Advertisement -

செல்வராகவன் திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து செல்வராகவன் நடித்த சாணி காகிதம் படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியான படம் பகாசூரன். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. பின் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருகிறேன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அதோடு செல்வராகவன் இந்த படத்தை இயக்குவது மட்டும் இல்லாமல் நடித்தும் இருந்தார்.

7 ஜி ரெயின்போ காலனி படம்:

இப்படி இவர் படங்களில் நடித்தும் இயக்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன், சோனியா அகர்வாலை டேக் செய்து இருக்கும் தகவல் தான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் தான் 7 ஜி ரெயின்போ காலனி. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

-விளம்பரம்-

செல்வராகவன் டீவ்ட்:

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் வெளிவந்த பிரபலமான காதல் படங்களில் 7g ரெயின்போ காலனியும் ஒன்று. இந்த படத்தை தெலுங்கில் 7ஜி பிருந்தாவன் காலனி என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இந்த மொழியிலும் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் மீண்டும் 7ஜி பிருந்தாவன் காலனி படத்தை செப்டம்பர் 22ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இது தொடர்பாக தான் செல்வராகவன் ட்வீட் ஒன்று போட்டிருந்தார்.

சோனியா அகர்வால் செய்த செயல்:

அதில் சோனியா அகர்வால் பேரையும் சேர்த்து டேக் செய்திருந்தார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமில்லாமல் சில நாட்களுக்கு முன்பு இப்படம் குறித்து சோனியா அகர்வால் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர் செல்வராகவன் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால், செல்வராகவன் பெருந்தன்மையாக சோனியா பெயரை டேக் செய்திருந்ததை பார்த்த சோனியா ரீ போஸ்ட் செய்திருக்கிறார்.

Advertisement