நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 65 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கில தலைப்பை வைத்துள்ளனர். பீஸ்ட் என்றால் அசுரத்தனமான பெரிய மிருகம் என்று ஆங்கிலத்தில் அர்த்தப்படுகிறது. அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர். இதற்கு முன்னர் விஜய் லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் என ஐந்து நேரடி ஆங்கில தலைப்புகளில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடித்து வருகிறார். முகமூடி படத்திற்கு பின் பூஜா ஹேக்டே நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் யோகி பாபு, VTV கணேஷ், அபர்ணா தாஸ் என்று பலர் நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக யார் நடிக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இதையும் பாருங்க : 9 ஆண்டுகள் கழித்து ஹீரோயின் வாய்ப்பு, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய ரஷிதா – விரைவில் NINI க்கு டாடா.
மேலும், இந்த படத்தில் அருண்விஜய், இயக்குனர் செல்வராகவன், பேட்ட படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நவாசுதீன், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம், துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜமால் போன்றவர்களின் பெயர்கள் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த படத்தில் செல்வராகவன் கமிட் ஆனார்.
ஆனால், செல்வராகவனுக்கு முன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க மிஷ்கினிடம் தான் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம். ஆனால், மிஸ்கின் ‘பிசாசு 2’ பட பணிகளில் பிசியாக இருந்ததால், அவரால் பீஸ்ட் படத்திற்காக தேதிகள் ஒதுக்க முடியவில்லையாம். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய மிஸ்கின் சித்திரம் பேசுதடி படத்தை விஜய் தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்று கேட்டதற்கு நீங்கள் ஒரு 10 சீன் மாத்தி இருப்பீங்க உங்க அப்பா ஒரு 10 சீன் மாத்தி இருப்பார் அதான் சொல்லவில்லை என்று மிஸ்கின் சொன்னதாக அவரே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.