ஆவிகளுடன் பேசும் ஓஜா போர்ட் மூலமாக என் அண்ணனின் ஆத்மா சொன்னது – என் அண்ணன் கொலை தான் செய்யப்பட்டான் – சீரியல் நடிகை ஜனனி.

0
1968
janani
- Advertisement -

சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ளது.இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த கொலை வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரித்து வருகிறது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சஸ்பெண்டில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் மற்றும் கான்ஸ்டபிள்கள் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் சமீபத்தில் சீரியல் நடிகை ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சாத்தான் குளம் சம்பவம் போல தனது அண்ணனுக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றதாக கூறி இருந்தார்

- Advertisement -

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜனனி அசோக், தனது அண்ணன் எப்படி இறந்தார் என்றும். அதற்கும் காவல் துறைக்கும் என்ன சம்மதம் என்றும் கூறியுள்ளார். அதில் பேசியுள்ள அவர், தனது அண்ணனின் இறப்பு தற்செயலாக நடந்தது இல்லை என்றும் பணத்திற்காக தான் சிலர் தனது அண்ணனை இப்படி செய்தார்கள் என்றும் கூறியுள்ளார் ஜனனி. கோயம்பத்தூர் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் செல்லும் பவானி ஆற்றில் குளிக்க வரும் வசதிபடைத்த நபர்களை குறிவைத்து அவர்கள் ஆற்றில் குளிக்கும் போது அவர்களை நீருக்கு அடியிலேயே அமுக்கி கொலை செய்துவிட்டு பின்னர் அவர்களை காப்பாற்ற சொன்னால் பணம் கொடுத்தால்தான் காப்பாற்றுவேன் என்று பேரம் பேசுவார்கள்.

அதே போல போலீஸ் வந்தால் தான் நாங்கள் காப்பாற்றுவோம் என்று கூறுவார்கள். ஒருவேளை ஆற்றில் மூழ்கியவர்கள் இறந்து விட்டால் போலீஸ் அங்கு வந்து விசாரிக்கும். மேலும், அவர்களும் பணத்தை கொடுத்தால் தான் பிணத்தை கண்டுபிடித்து கொடுப்போம் என்றும் கூறுவார்கள். இப்படி பணத்திற்காக கொள்ளும் கூட்டம் அங்கே பல ஆண்டுகளாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கும்பலுக்கு போலீசின் உதவி இருக்கிறது ஏனென்றால் இதன் மூலம் வரும் பணத்தில் போலீசுக்கும் பங்கு இருக்கிறது என்று கூறியுள்ளார் ஜனநி அசோக்.

-விளம்பரம்-

மேலும், இதுபோன்ற சம்பவம் என்ன அண்ணனுக்கு மட்டும் இல்லை அவர் இறந்த பின்பு பலருக்கும் அதே பவானி ஆற்றில் இதேபோல நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கப்பட்ட போது ஒரு முறை ஓஜா போர்டில் நாங்கள் என்னுடைய அண்ணனின் ஆத்மாவிடம் பேசினோம். அவன் தான் இதைச் சொன்னான் அவன் தெளிவாகச் சொல்லவில்லை. என் அண்ணனின் ஆத்மா வேறு ஒருவர் உடலில் வந்து ஒரு சில வார்த்தைகளை கூறி இருந்தது. ஆனால் இதெல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது எனக்குத் தெரியும் இருப்பினும். நான் சொல்வது உண்மை என் அண்ணனை போல பணத்திற்காக அங்கே இன்னும் பலர் கொல்லப்பட்டு தான் வருகின்றார்கள் என்று ஷாகே கொடுத்துள்ளார் ஜனனி

Advertisement