திடீர் திருமணம் செய்து கொண்டாரா செம்பருத்தி சீரியல் மித்ரா ? வைரலாகும் வீடியோ.

0
8607
mithra
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-41.jpg

இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடிக்கிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்ற தொடராக செம்பருத்தி உள்ளது. செம்பருத்தி சீரியலில் நடிகை ஷபானாவுக்கு ஜோடியாக நடிப்பவர் ஆபிஸ் சீரியலில் புகழ்பெற்ற கார்த்திக் ராஜ் தான். செம்பருத்தி சீரியலில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரியும் வேற லெவல். அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் உள்ளது. இவர்கள் இருவருக்கு நிகராக செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் மித்ராவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான்.

- Advertisement -

செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் மித்ராவின் உண்மையான பெயர் பரதா நாயுடு. இவர் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் முடித்துள்ளார். எல்லாரும் செய்வதைப் போல் இவரும் மாடலிங்கில் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் இவர் 2011 ஆம் ஆண்டு பாஸ்கர் இயக்கத்தில் வெளியான ‘தேன் மிட்டாய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், 2017-ம் ஆண்டு வெளியான ‘நிரஞ்சனா’ படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இப்படி இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் பெரிய அளவு பிரபலமாகவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் செம்பருத்தி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மித்ரா திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ சூட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனால் பரதவிற்குா திருமணமா என்று ரசிகர்கள் குழம்பி வந்தனர். இந்த நிலையில் மித்ராவிற்கு திருமணமே முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மண கோலத்தில் நடிகை பரதா நாயுடு டிக் டாக் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் பரதாவின் கழுத்தில் தாலியுடன் இருப்பதை கண்டு ரசிகர்கள் இவருக்கு திருமணமே முடிந்துவிட்டதா என்று ஷாக்கடைந்துள்ளனர். ஆனால், திருமணம் குறித்து பரதா இது வரை எந்த ஒரு தகவலையும் அறிவிக்கவில்லை. மேலும், திருமணமானதால் நடிகை பரதா ‘செம்பருதி’ சீரியலில் தொடருவரா இல்லையா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

Advertisement